விதிமுறை மீறலுக்காக அமேசானுக்கு அபராதம்

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: விற்பனை செய்யப்படும் பொருட்களில், அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை என கூறி, அமேசான் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது, அரசு.மின்னணு வர்த்தக தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில், விலை விபரம் உள்ளிட்ட கட்டாயத் தகவல்களுடன், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என,
Amazon, fined, country_of_origin

புதுடில்லி: விற்பனை செய்யப்படும் பொருட்களில், அவை எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது குறித்த தகவலை தெரிவிக்கவில்லை என கூறி, அமேசான் நிறுவனத்துக்கு அபராதம் விதித்துள்ளது, அரசு.

மின்னணு வர்த்தக தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில், விலை விபரம் உள்ளிட்ட கட்டாயத் தகவல்களுடன், எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்நிலையில், இது குறித்து, 'அமேசான் மற்றும் பிளிப்கார்ட்' ஆகிய நிறுவனங்களுக்கு, கடந்த மாதம் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம், 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது.


latest tamil newsஇதன் தொடர்ச்சியாக தற்போது, பெங்களூரைச் சேர்ந்த, அமேசான் விற்பனையாளர் சேவைகள் நிறுவனத்திற்கும், அதன் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டை பொறுத்தவரை, அதன் மீதான குற்றச் சாட்டுகள் குறித்து விசாரித்த போது, அத்தகைய விதிமுறை மீறல்கள் எதுவும் காணப்படவில்லை என்பதால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சில விற்பனையாளர்கள், தங்களுடைய வர்த்தக தளத்தில் இத்தகைய தகவல்களை தெரிவிக்க வில்லை என கூறி, குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டது அமேசான். இதையடுத்து, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய விதிமீறல்கள் குறித்து அனுப்பப்படும் நோட்டீசுக்கு, திருப்தியளிக்கும் விதத்தில் பதிலளிக்கப்படாவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என, மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-நவ-202013:32:00 IST Report Abuse
Ramesh Sargam மின்னணு வர்த்தக தளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் தொண்ணூறு சதவிகிதம் சீனா மேக் பொருட்கள். ஆகையால்தான் அதைமறைத்து இவர்கள் மக்களை ஏமாற்றி விட்பனை செய்கிறார்கள். நன்றாக தண்டிக்கப்படவேண்டும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-நவ-202015:14:39 IST Report Abuse
தமிழவேல் மறைப்பது அமாசான் அல்ல.. அவர்களுக்கு சப்லை செய்பவர்கள் சரியான விபரம் அவர்களுக்குத் தருவதில்லை. அவர்கள் அனுப்புவதை "சரி பார்க்காமல்" அப்படியே பதிவேற்றி விடுகின்றார்கள்.. சிலகாலமாக, சீனா என்று போடுவதற்கு பத்தி PRC என்று போடுகின்றார்கள்....
Rate this:
Cancel
Raj - Trichy,இந்தியா
27-நவ-202008:08:28 IST Report Abuse
Raj >75% of all items are China made Item only ,almost Charging more than Double to Tripple price.
Rate this:
Raj - Trichy,இந்தியா
27-நவ-202014:35:32 IST Report Abuse
Raj ஹெலிகாப்டறில் சப்ளை சேயியும் விலையை, வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள், விபரம் அறியாமால் மக்களும் வேறு வழியில்லாமல் அதனை வாங்குகிறார்கள்.சில எலக்ட்ரானிக் பொருள்களுக்கு பத்து மடங்கு விலை உள்ளது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X