பொது செய்தி

இந்தியா

"யாருமே இல்லாத ஊரில் டீ கடை நடத்துவது போல அந்த நடிகரின் தந்தை செயல்பாடு உள்ளது..."

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
யார் விலகினாலும், கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்கிறார், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். யாருமே இல்லாமல், கட்சியை நடத்துவது எப்படி என்பதை, அடுத்த தலைமுறை, அவரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.- முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்'யாருமே இல்லாத ஊரில் டீக்கடை நடத்துவது போல, அந்த நடிகரின் தந்தை செயல்பாடு உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி
"யாருமே இல்லாத ஊரில் டீ கடை நடத்துவது போல அந்த நடிகரின் தந்தை செயல்பாடு உள்ளது..."

யார் விலகினாலும், கட்சியை தொடர்ந்து நடத்துவேன் என்கிறார், நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். யாருமே இல்லாமல், கட்சியை நடத்துவது எப்படி என்பதை, அடுத்த தலைமுறை, அவரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
- முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன்


'யாருமே இல்லாத ஊரில் டீக்கடை நடத்துவது போல, அந்த நடிகரின் தந்தை செயல்பாடு உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் அறிக்கை.மருத்துவ மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு தாமதமாக வெளியிட்டதால், பல மாணவர்களுக்கு படிக்க வாய்ப்பு கிடைக்காமல், காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். எனவே, உருவாகும் காலியிடங்களில், இந்த காத்திருக்கும் மாணவர்களுக்கு இடம் ஒதுக்க வேண்டும்.
- தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி


'மருத்துவம் படிக்கும் மக்கள் மீது தான், உங்களுக்கும், உங்கள் கட்சியினருக்கும் எவ்வளவு கரிசனம் என எண்ணத் தோன்றும் வகையில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி அறிக்கை.தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துவிட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு விழாவில் எதிர்க்கட்சிகளை சாடி அரசியல் பேசியது மரபை மீறிய செயல். தற்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைத்திருப்பதால், தி.மு.க., கூட்டணிக்கு தான் பலம் சேர்ந்துள்ளது.
- எம்.பி., திருநாவுக்கரசர்


latest tamil news
'பிற மாநிலங்களைப் போல, தி.மு.க., கூட்டணியிலிருந்து, 'எக்ஸ்ட்ரா லக்கேஜ்' காங்கிரசை கழற்றி விட வேண்டும் என்றல்லவா பேச்சு அடிபடுகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், திருச்சி காங்., - எம்.பி., திருநாவுக்கரசர் பேட்டி.கொடுத்தவனே பறித்துக் கொண்டானடி என்பது போல, பொதுப் பணித் துறையை நிர்வகிக்கும் முதல்வர் இ.பி.எஸ்., பொதுப் பணித் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை செய்துள்ளார். இதை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது
- தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன்


'முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் என்பதால், அந்தத் துறையினர் குறித்து, கோரிக்கை வைத்துள்ளீர்களோ என்பது தான், அந்தத் துறையினரின் சந்தேகமாக உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் அறிக்கை.வட்டாரப் போக்குவரத்து கழக அலுவலகத்தில், லாரிகளுக்கு, எப்.சி., பெற, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படுவது கட்டாயம் என்ற விதிமுறை உள்ளது. இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும்; இல்லை என்றால், லாரிகளை, அரசிடமே ஒப்படைப்போம்.
- தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கழக கூட்டமைப்பின் தலைவர் செல்லராஜாமணி


'லாரி உரிமையாளர்களில் பலர் அரசியல்வாதிகளாகவும், பல லாரிகளுக்கு அதிபர்களாகவும் இருப்பதால் தான், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழ்நாடு மோட்டார் போக்குவரத்து கழக கூட்டமைப்பின் தலைவர் செல்லராஜாமணி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
27-நவ-202017:17:34 IST Report Abuse
Vijay D Ratnam எனக்கு பெரிதாக அரசியல் தெரியாது.1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் இருந்து ஒவ்வொரு முறையும் தவறாமல் வாக்களிக்கிறேன். ஜெயலலிதாவின் 1991-1996 ஆட்சி மிக மட்டமான ஆட்சி, சசிகலாவின் சேர்க்கை, வளர்ப்பு மகன் திருமணம் போன்ற செயல்களால் நாறியது அவர் பெயர். அடுத்து வந்த கருணாநிதியின் 1996-2001 மட்டமான ஒரு ஆட்சி குடும்ப அரசியலை புகுத்தி தமிழக அரசியலை நாசமாக்கிய ஆட்சி. அடுத்து வந்த ஜெயலலிதாவின் 2001-2006 உண்மையிலே மிகச்சிறந்த ஆட்சி என்றே சொல்லலாம், முந்தைய தன் ஆட்சிக்காலத்தில் நடந்த எந்த கெட்ட விஷயங்களும் இல்லை. அடுத்துவந்த கருணாநிதியின் 2006-2011 ஆட்சி படு கேவலமான ஆட்சி, தமிழ்நாட்டை நாறடித்த வாரிசு அரசியல், கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு, கிரானைடு கொள்ளை, ஸ்டேட் சென்ட்ரல் பதவிகளை வாரிசுகளை வைத்து நிரப்பியது என்று மக்கள் வெறுத்துப்போய் ஆட்சியை தூக்கியெறிந்தார்கள். அடுத்து வந்த ஜெயலலிதாவின் 2011-2016. ஆட்சி சிறப்பானது தான், அதனால்தான் அடுத்த தேர்தலில் தனித்து நின்று ஆட்சியை பிடித்தது மட்டுமல்லாமல் பாராளுமன்ற தேர்தலில் மொத்த இடங்களையும் அள்ளியது. இப்போது ஜெயலலிதா விட்டுச்சென்ற இந்த 2016-2021. ஆட்சியை நான்கு ஆண்டுகாலமாக மிகச்சிறப்பாக எடப்பாடி பழனிசாமி நடத்துகிறார் என்றே சொல்லலாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-நவ-202014:48:29 IST Report Abuse
Ramesh Sargam நிறைய சினிமாக்காரர்களின் கனவு இப்படித்தான் இருக்கிறது. சினிமாவில் சான்ஸ் போனால், அரசியலில் 'குதித்து' ஈசியாக முத்து எடுத்துவிடலாம் என்று. ஹூம்... எல்லோரும் ஒரு MGR போலவோ, அல்லது ஒரு Jayalalithaa போல் ஆகிவிடமுடியுமா??
Rate this:
Cancel
C.ELUMALAI - Chennai,இந்தியா
27-நவ-202014:00:34 IST Report Abuse
C.ELUMALAI நினைப்பு பொழப்பை கெடுத்தகதை, நினைவு. அதிமுக எங்கே தனக்கு ஆப்பு வெச்சுடுமோ என்ற பயத்தில் பீகாரிகாரன் காலில் விழுந்து சன்மானமாக 350 கோடியையும் கொடுத்து ஆலோசனை கேட்கிறார்,சுடலைகான்ஜோசப்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X