வாஷிங்டன்: ‛எலெக்ட்ரல் காலேஜ்' குழுவினர் பைடனின் வெற்றியை உறுதி செய்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி பெற்றாலும் தற்போதைய அதிபரும், குடியரசு கட்சி வேட்பாளருமான டிரம்ப் அதனை ஏற்க மறுத்து வருகிறார். தேர்தலில், 538 ‛எலெக்ட்ரல் காலேஜ்' எனப்படும் வாக்காளர் குழு உறுப்பினர்களில், பைடனுக்கு 306 பேரின் டிரம்ப்பிற்கு 232 பேரின் ஆதரவும் உள்ளது.வரும் டிச.,14 ம் தேதி எலெக்ட்ரல் காலேஜ் குழு உறுப்பினர்கள் ஒன்று கூடி பைடனின் வெற்றியை உறுதி செய்ய உள்ளனர்.
இந்நிலையில், டிரம்ப்பிடம், பைடனின் வெற்றியை ‛எலெக்டரல் காலேஜ்' உறுதி செய்தால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு டிரம்ப் அளித்த பதில்: நிச்சயமாக வெளியேறுவேன். இதனை நீங்கள் அறிவீர்கள். பைடனின் வெற்றியை அங்கீகரித்தால் , அவர்கள் பெரிய தவறை செய்வார்கள். தற்போது முதல் ஜன.,20க்குள் நிறைய விஷயங்கள் நிகழும். இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார். ஜோ பைடனுக்கு 306 மக்கள் எலெக்ட்ரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் குழுவில் 3 ஓட்டுகள் கிடைத்துள்ளது. டிரம்புக்கு 232 ஓட்டுகள் மட்டுமே கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE