நடப்பாண்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இல்லை| Dinamalar

நடப்பாண்டில் மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இல்லை

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (8)
Share
புதுடில்லி: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அந்த உத்தரவை
50Percent, Reservation, GovtDoctors, SupremeCourt

புதுடில்லி: தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளில் சேரும் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வரராவ் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வந்தது.


latest tamil news



இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பில் இந்தாண்டு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது என உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் வாதங்களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X