அரசியல் செய்தி

தமிழ்நாடு

எளிமையான எடப்பாடி பழனிசாமி; ‛இமேஜை' உயர்த்திய புயல் நடவடிக்கைகள்

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (97)
Share
Advertisement
சென்னை: மக்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல், திடீர் முதல்வரான எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நடவடிக்கைகள், அவரை மக்களின் முதல்வராக காட்டுகின்றன என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.எடப்பாடி பழனிசாமிக்கு சினிமா பின்புலமோ, எந்த கவர்ச்சியோ இல்லை. கட்சியின் சூழ்நிலை அவரை முதல்வராக்கியது. அப்போது, அவரிடமிருந்து மக்கள் பெரிதாக எதையும்
தமிழகம், முதல்வர்பழனிசாமி, எடப்பாடிபழனிசாமி, மக்கள், புயல்நிர்வாகம்,

சென்னை: மக்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல், திடீர் முதல்வரான எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நடவடிக்கைகள், அவரை மக்களின் முதல்வராக காட்டுகின்றன என்று அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு சினிமா பின்புலமோ, எந்த கவர்ச்சியோ இல்லை. கட்சியின் சூழ்நிலை அவரை முதல்வராக்கியது. அப்போது, அவரிடமிருந்து மக்கள் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர் தலைமை எப்படியிருக்கும், அரசை எப்படி வழிநடத்தி செல்வார், நிர்வாகத்திறமை எப்படிப்பட்டது, ஆளுமையுடன் கட்சியை கொண்டு செல்வாரா இல்லையா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இவரது அரசு நீண்ட நாள் நீடிக்காது. கட்சியும் கலைந்துவிடும். ஆட்சி நம் கைக்கு வந்துவிடும் என்று கூட தி.மு.க.,வினர் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். ஆனால், நினைத்ததற்கு மாறாக, அரசை திறம்பட நிர்வாகம் செய்து, கட்சியையும் கட்டுக்கோப்பாக வைத்து, ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி.


கொரோனாவை சமாளித்த விதம்


கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் படுவேகமாக பரவிய போது அதை சமாளிக்க பல மாநிலங்கள், தடுமாறின. ஊரடங்கை அமல்படுத்துவதிலும், கண்டிப்பு காட்டப்படவில்லை. அரசு மருத்துவமனைகளிலும் போதிய சிகிச்சை வசதிகள் இல்லை. ஆனால், தமிழகத்தில், உடனுக்குடன் வென்டிலேட்டர் வசதி, மருத்துவ சிகிச்சை , தனி கொரோனா வார்டுகள் என ஆரம்பிக்கப்பட்டு, கொரோனாவின் பாதிப்பு குறைக்கப்பட்டது.


latest tamil newsஊரடங்கும் திறம்பட செயல்படுத்தப்பட்டது. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தமிழக அரசு முன்னணியில் இருந்தது. இதையெல்லாம் கவனித்த மத்திய அரசு, கொரோனா நிர்வாகத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டியது. பா.ஜ., ஆளும் மாநிலங்களை கூட மத்திய அரசு பாராட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


புயல் நிர்வாகம்இதற்கு முன்பு, தமிழகத்தை புயல்கள் தாக்கிய போது எல்லாம், அதை சமாளிக்க முடியாமல் அப்போதைய ஆட்சியாளர்கள் திணறியது வெளிப்படை. ஆனால் ‛நிவர்' புயலை எடப்பாடி அரசு சமாளித்த விதம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. உண்மையில், புயல் உருவான போதே, அதுவும் தமிழகத்தை தாக்கப்போகிறது என்ற தகவல் வந்ததும் பலருக்கும் பீதி ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு எப்படி எடுக்க போகிறது, இந்த அரசு சொன்னால் அதிகாரிகள் கேட்பார்களா என்றெல்லாம் பலருக்கும் சந்தேகம் இருந்தது.

ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து, அனைத்து துறைகள், அதிகாரிகள், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுக்கள் என்று அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து புயலின் சேதத்தை பெருமளவு குறைத்துவிட்டது எடப்பாடி அரசு. அனைத்து அமைச்சர்களையும் பம்பரமாக சுழலவிட்டார் முதல்வர். இதனால், புயலுக்கு முன் பீதியில் இருந்த மக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டு, தமிழக அரசை பாராட்டுகின்றனர்.

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரி, திறப்புக்கு முன்னர், தகுந்த எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்தது, அதற்கு முழுமையாக மீடியாக்களை பயன்படுத்தியது, படிப்படியாக தண்ணீரை திறந்துவிட்டது, அதற்கு முன்பு அடையாற்றை ஓரளவுக்கு தூர்வாரியிருந்தது ஆகியவற்றால், 2015 ஐ போல் அல்லாமல் நீர்சூழ்ந்த பகுதிகள் குறைக்கப்பட்டன.


latest tamil news


Advertisement

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் திறப்பை முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கு முன்பு எந்த முதல்வரும் செய்யாதது இது. கொட்டும் மழையில் ஏரியை பார்வையிட்ட போது, குடையை கூட அவர், தானே பிடித்து கொண்டே இருந்தார். வேறு யாரையும் பிடிக்க அனுமதிக்கவில்லை.


latest tamil news
அதோடு இல்லாமல், புயல் நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்று, தங்கியிருந்தவர்களிடம் அவரே, நலம் விசாரித்தார். வயதானவர்களை தொட்டு, கையை பிடித்து பேசி பாசம் காட்டினார்.


latest tamil news


புயல் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் பேசினார். முதல்வரை கண்டதும், அதிகாரிகள் இருக்கைகளை விட்டு எழுந்த போதும், அவர்களை அமர சொல்லி உங்கள் வேலைகளை பாருங்கள் என்று தொந்தரவு செய்யாமல் விட்டார்.


latest tamil news


காலில் விழும் கலாசாரத்தால், எழுந்து வளர்ந்த அதிமுகவினர், முதல்வர் பழனிசாமியின் இந்த எளிமையை கண்டு ஆச்சர்யமடைந்தனர். மற்றவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் அவரது தன்மையை மெச்சுகின்றனர். இவையெல்லாம், பழனிசாமியின் ‛இமேஜை' உயர்த்தியுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - chennai,இந்தியா
01-டிச-202013:37:02 IST Report Abuse
Ramasamy மக்களின் முதல்வர் எங்கள் பழனி அவர் ஒரு சாமீ . தமிழ் நாடு வளர வேண்டும் என்று நினைக்கும் ஒவொருவரும் அவரை மீண்டும் முதல்வராக்கணும் . காமராஜரை ஒதுக்கிய பழியை துடைக்க இதுதான் தக்க தருணம் . பின்புலம் குடும்ப அரசியல் இல்ல மக்கள் முதல்வர் பனி தொடரட்டும் . வாழ்க பல்லலண்டு எங்கள் விவசாயீ . அவர் நடக்கும் விதம் பார்த்தால் அவர் ஒரு முதல்வர் என்ற வட்டத்திற்குள் சுருங்க விரும்பவில்லை. திராவிட ஆட்சி இனிமேல் EPS MGR J AND KALINGAR என்றுதன வரலாறு இனி சொல்லும் . தமிழ் மண்ணின் மைந்தன் வாழ்க
Rate this:
Cancel
Ramasamy - chennai,இந்தியா
01-டிச-202013:29:35 IST Report Abuse
Ramasamy nir
Rate this:
Cancel
umari siva - tambaram,இந்தியா
30-நவ-202019:19:51 IST Report Abuse
umari siva திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்த மனமும் செயல் திறனும் கொண்டவர். டெல்டா பிரதேசத்தை வேளாண் மண்டலமாக அறிவித்தது சரித்திர பிரசித்தி பெற்றது. அது போல் பல விஷயங்களை துணிவுடன் செயல் படுத்தும் அடுத்த காமராஜர். தமிழகமே அவரை மீண்டும் முதல்வராக்க வேண்டும்
Rate this:
Sivasankar Ayyadurai - mdu,இந்தியா
01-டிச-202011:19:50 IST Report Abuse
Sivasankar Ayyaduraiஅடுத்த காமராஜரா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X