புதுடில்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு நடிகர் சோனு சூட் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டில்லி நோக்கி பேரணியாக சென்றனர். அவர்கள் ஹரியானா - டில்லி மாநில எல்லைப் பகுதியில் ஹரியானா போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்த ஹரியானா அரசு எல்லைகளை மூடியது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசினர்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கின்போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிய நடிகர் சோனுசூட், மத்திய அரசால் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ‛விவசாயி என் கடவுள்' என்று டுவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவியபோது மஹாராஷ்டிரா முதல்வர் மற்றும் பல்வேறு பாஜ.,வினர் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும், அவரை பாஜ., ஆதரவாளர் என்று சமூக ஊடகங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE