01. ராஜஸ்தானில் மோனிகா என்ற பெண் திருமணம் செய்த இரவில் மாயமானார். கணவன் வீட்டில் இருந்த நகை பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு தப்பினார். போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இது போல் பல போலி திருமணங்கள் இந்த பெண் செய்துள்ளார்.

02. புதுடில்லி: ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் டில்லி நோக்கி பேரணியாக வந்த போது போலீசார் கண்ணீர் புகை வீசி தாக்குதல் நடத்தினர்.
03. உ .பி., மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இறந்த சிறுமியின் உடலை நாய் கடித்ததாக ஒரு வீடியோ வைரலாக பரவியது.
04. கோவா : அரபிக்கடல் மேல் பறந்த மிக் ரக விமானம் கடலில் மோதி விழுந்தது. இதில் பைலட் ஒருவர் காணாமல் போனார். பைலட் கவனக்குறைவா என விசாரிக்கப்படுகிறது.

05. மஹாராஷ்ட்டிரா: மும்பையில் கிங்ஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
06. கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 364 கிராம் தங்கம் ஒரு பயணியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

08. கர்நாடக மாநிலம் சிக்மகளூரில் காதலுக்கு தடையாக இருந்ததால் குடிப்பழக்கம் உள்ள கணவனை கழுத்தை நெறித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
09. குஜராத் ராஜ்கோட்டில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலியாயினர்.
தமிழகத்தின் நிகழ்வு
01. ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை மாவட்டம் செக்கானூரனி இன்ஸ்பெக்டர் அனிதா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

02. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணத்திற்கு சில மணி நேரம் முன்னதாக மாப்பிள்ளை தலைமறைவானார். இந்த சம்பவம் இங்கு பரபரப்பாக பேசப்படுகிறது.
03. கடையநல்லூர் அருகே பணம் வைத்து சூதாட்டிய 15 பேர் கைது.
04. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலக நடப்பு
தென் கொரியாவை சேர்ந்தவர் சோச்சூ பின் 25. பட்டதாரியான இவர் 16 பெண்களை ஆபாச படமெடுத்து மிரட்டினார். இந்த குற்றத்திற்கு 40 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE