இந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு| Dinamalar

இந்துக்களே ஒன்று சேருங்கள் : டிரெண்டிங்கில் அழைப்பு

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (64) | |
புதுடில்லி : சமூகவலைதளமான டுவிட்டரில் 'இந்துக்களே ஒன்று சேருங்கள்' என்ற பெயரில் #joinhinduecosystem என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது. சினிமா மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ந்து இந்து கடவுள்கள், அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமான காட்சிகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அதிலும் தணிக்கை இல்லாத வெப்சீரிஸ்களில் இந்த காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. சமீபத்தில் கூட ஒரு
joinhinduecosystem,

புதுடில்லி : சமூகவலைதளமான டுவிட்டரில் 'இந்துக்களே ஒன்று சேருங்கள்' என்ற பெயரில் #joinhinduecosystem என்ற ஹேஷ்டாக் டிரெண்ட் ஆகி வருகிறது.

சினிமா மற்றும் வெப்சீரிஸ்களில் தொடர்ந்து இந்து கடவுள்கள், அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமான காட்சிகள் அதிகளவில் இடம் பெறுகின்றன. அதிலும் தணிக்கை இல்லாத வெப்சீரிஸ்களில் இந்த காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. சமீபத்தில் கூட ஒரு வெப்சீரிஸில் கோவிலில் வைத்து ஹீரோ, ஹீரோயின் முத்தமிட்ட காட்சி இடம் பெற்று சர்ச்சையானதுடன், அந்த வெப்சீரிஸ் குழு மீது வழக்கும் பதிவானது. மேலும் மறைமுகமாக லவ்-ஜிகாத் பிரச்சாரமும் அதிகமாகி வருகிறது. சினிமா தவிர்த்து பொதுவாக சிலரும், இந்துக்கள் எதிரான கருத்துக்களை பதிவிட்ட வருகின்றனர். இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும், இந்துக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என அவ்வப்போது சமூகவலைதளங்களில் குரல்கள் எழும்.


latest tamil news
இந்நிலையில் பா.ஜ.,வின் கபில் மிஸ்ரா கடந்தவாரம், joinhinduecosystem என்ற விஷயத்தை முன் எடுத்து வைத்தார். ஆன்லைன் மூலம் இதில் இணையவேண்டும். இதில் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி சில கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை தேர்வு செய்து தங்களை உறுப்பினராக்கி கொள்ளலாம். இந்துக்கள் ஒன்று திரளும் ஆன்லைன் அழைப்பு, கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்று டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆகும் அளவுக்கு ஒலிக்க தொடங்கி உள்ளது.

இந்துக்கள் பலரும் இதில் தங்களை உறுப்பினராக்கி கொண்டு, தான் இதில் இணைந்துவிட்டதாக டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் நாம் எதற்காக ஒன்று திரள வேண்டும் என தங்களது கருத்துக்களை சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக இதில் தாங்கள் இணைந்ததற்கான காரணமாக இந்து மதம் மற்றும் அவற்றின் நம்பிக்கையை சீர்குலைக்கும் விதமான விஷயங்கள் அரங்கேறுவது, லவ்-ஜிகாத் போன்ற விஷயங்களை குறிப்பிட்டு வருகின்றனர். இதனால் இன்று டுவிட்டரில் #joinhinduecosystem என்ற ஹேஷ்டாக் தேசிய அளவில் டாப்பில் டிரெண்ட் ஆனது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X