அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (15) | |
Advertisement
சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளதால், அதற்கு கடன் வழங்க வேண்டாம் எனக் கூறி 2 போராட்டக்காரர்கள் கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று (நவ.,27) முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு
Adani, AustralianProtesters, EnteredGround, அதானி, கடன், ஆஸ்திரேலியா, மைதானம், போராட்டம்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளதால், அதற்கு கடன் வழங்க வேண்டாம் எனக் கூறி 2 போராட்டக்காரர்கள் கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி இன்று (நவ.,27) முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. ‛டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு விளையாடியது. போட்டியின் 7வது ஓவரின்போது மைதானத்துக்குள் நுழைந்த இரு ஆஸ்திரேலியர்கள் ‛அதானிக்கு 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் கடன் வழங்காதே' என்ற வாசகத்துடன் கூடிய பதாகையை ஏந்தி ஸ்டேட் பேங்கிற்கு கோரிக்கை வைத்தனர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பதட்டம் ஏற்பட்டது. மைதானத்தின் பாதுகாவலர்கள் இருவரையும் அப்புறப்படுத்திய பின்னர், போட்டி தொடர்ந்து நடைபெற்றது.


latest tamil news


ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் அதானி குழுமம் நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ளது. இதற்கு ஆஸ்திரேலிய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்காக ஸ்டேட் பேங்கானது 1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரை அதானி குழுமத்திற்கு கடனாக வழங்க உள்ளது. இத்திட்டத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் போராட்டங்கள் நடந்துவரும் நிலையில், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு, கிரிக்கெட் போட்டியின் இடையே போராட்டக்காரர்கள் மைதானத்துக்குள் நுழைந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202005:09:39 IST Report Abuse
Mani . V அருமை. வாழ்த்துக்கள் சகோதரா
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202004:15:23 IST Report Abuse
J.V. Iyer ஆஹா உடனே செய்துவிடுவார்கள். ஆகட்டும் பார்க்கலாம்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
27-நவ-202023:35:19 IST Report Abuse
Allah Daniel ஆமா...அதாநிக்கு கார்புரட்டு....ஆனா suntv கார்புரட்டு இல்லை...
Rate this:
கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி மாவட்டம், தமிழகம் ,இந்தியா
28-நவ-202007:33:25 IST Report Abuse
கருப்பட்டி சுப்பையாஎங்க போராளிகளுக்கு அம்பானி அதானி மட்டும் தான் கார்ப்பரேட். மத்தபடி இந்த அமேசான் prime, ஹாட்ஸ்டார், suntv திமுக, Ipac ,போன்ற அனைத்தும் 'குடிசை தொழில் நிறுவனங்கள்' அதன் ஓனர்கள் மாட்டுவண்டியில் தான் போகிறார்கள் ன்னா பாத்துகோங்களேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X