வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து உலக நாடுகள் பல தடுப்பு மருந்து சோதனையில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவில் இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது கொரோனா வைரஸ் முதல் அலை ஓய்ந்து உள்ளது. வரும் டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படும். இதன்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தாக்கி மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் பலியாக வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இது அமெரிக்கர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஏற்கனவே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்று லட்சத்தை நெருங்கி வரும் பலி எண்ணிக்கை இரண்டாம் அலையின்போது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலை பேராசிரியர் ஜோனதன் கூறுகையில், ‛வரும் நாட்களில் ஒரு நாளைக்கு கொரோனாவுக்கு 4 ஆயிரம்பேர் பலியாக வாய்ப்பு உள்ளது. நிலைமை இவ்வாறு நீடித்தால் அடுத்த 20 நாட்களில் அமெரிக்கா 60 ஆயிரம் குடிமக்களை இழக்கும் என்று எச்சரித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று சமூக விலகலை கடைபிடித்தாலே ஒழிய அமெரிக்கர்களை காப்பாற்றுவது மிகவும் சிரமம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE