கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோயில் நிலத்தில் கலெக்டர் அலுவலகம்: உயர்நீதிமன்றம் தடை

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, கோயில் நிலத்தில் அமைக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த
கள்ளக்குறிச்சி, கலெக்டர், கலெக்டர்அலுவலகம், சென்னைஉயர்நீதிமன்றம், சென்னைஐகோர்ட், உயர்நீதிமன்றம், ஐகோர்ட், தடை,

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை, கோயில் நிலத்தில் அமைக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க, வீரசோழபுரம் சிவன் கோயிலுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலத்தை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு விசாரித்தது.


latest tamil newsஅப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அமைக்க கோயில் நிலத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பாக அக்.,29 ல் ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். ஆனால், அக்கூட்டம் நடப்பதற்கு 6 நாட்களுக்கு முன்பே முதல்வர், கலெக்டர் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் துவங்கிவிட்டன. 100 கோடி ரூபாய் மதிப்பு நிலத்தை அரசுக்கு ரூ.1 கோடியே 98 லட்சம் ரூபாய்க்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்'' என வாதிட்டார்.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், கருத்து கேட்பு கூட்டத்தின் அடிப்படையில் கோயில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக குத்தகைக்கு வழங்க ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முடிவு செய்துள்ளார். பரிந்துரையின் மீது அரசின் முடிவுக்கு காத்திருப்பதாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக டிச.,9 ம் தேதிக்குள் தமிழக அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு, அதுவரை கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க இடைக்கால தடை விதித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
28-நவ-202004:41:37 IST Report Abuse
spr தனியொரு நபராக, தன் சொந்தக் செலவில் வழக்கு தொடுப்பதாகச் சொல்லும் திரு ரங்கராஜன் நரசிம்மன் அவருக்கு உதவியாக இருக்கும் வழக்கறிஞர்களை பாராட்டுவோம். ஆனால் கோயில் நிலத்தை அரசுக்கு சொந்தமாக வழங்குவதற்கு பதிலாக அறநிலையத்துறை முதலீடு செய்து அங்கே கடைகள் கட்டி அதனைக் கோயிலுக்கு உரிமையாக்க வேண்டும் கோயில் நிர்வாகம் குறித்த காலத்தில் வாடகை வசூலிக்க வழி செய்ய வேண்டும் அது முழுமையும் அக்கோயில் நிர்வாகத்திற்கே செலவிடப்பட வேண்டும் வெள்ளியங்கிரி போல குத்தகை ஒரு கூட்டுக கொள்ளைக்கு வழி வகுக்கக்கூடாது இனி வரும் காலத்திலாவது முதல்வர் பிரதமர் குடியரசுத் தலைவர், நீதிபதிகள் போன்றோர் இத்தகு விழாக்களில் பங்கேற்பது, தலைமை வகிப்பதனைத் தவிர்க்க வேண்டும் இல்லையேல் வழக்கு என வந்தால் அவர்களையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற வேண்டும் குற்றம் நிரூபணம் ஆனால் அவர்களுக்கும் தண்டனை தர வேண்டும் சீரங்கம் கோவில் முறைகேடுகளையும் வெளிக்கொணரும் இவர் முயற்சி பலன் தர வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
27-நவ-202022:17:30 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன்க்கு வாழ்த்துக்கள், தங்கள் பணி புனிதமானது, போற்றத்தக்கது. இது போன்ற நிறைய சட்ட போராளிகள் தமிழக ஹிந்துக்கலுக்கு அவசியம் தேவை.
Rate this:
karutthu - nainital,இந்தியா
28-நவ-202018:50:21 IST Report Abuse
karutthuஇப்போ பார்த்து இந்த டிராபிக் ராமசாமி காணாமல் போய்ட்டாரே...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
27-நவ-202021:13:09 IST Report Abuse
Darmavan ஹிந்து கோயில்களில் அரசு தலையீடு இருக்க கூடாது .பரம்பரை அறங்காவலர்களிடமோ,ஹிந்து மத தலைவரிடமோ ஊர் பொது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிந்து மத ட்ரஸ்ட்டிடமோ ஒப்படைக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X