மெஹபூபா வெற்றிக்காக பயங்கரவாதிகளின் உதவி நாடல் : என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அவரின் வெற்றிக்காக ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதிகளின் உதவியை அவரது கட்சி இளைஞரணி தலைவர் நாடியதாக என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து ரத்து செய்யப் பட்டது. முன்னதாக மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்து
மெகபூபாமுப்தி, பிடிபி, பயங்கரவாதிகள், என்ஐஏ,

ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிட்டார். அவரின் வெற்றிக்காக ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாதிகளின் உதவியை அவரது கட்சி இளைஞரணி தலைவர் நாடியதாக என்.ஐ.ஏ., தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் மாநில அந்தஸ்து ரத்து செய்யப் பட்டது. முன்னதாக மெஹபூபாவின் மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தியது. 2018-ல் இக்கூட்டணி முறிந்தது. தற்போது சிறப்பு அந்தஸ்தை மீட்கும் நோக்கத்துடன் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. இந்த நிலையில் மெஹபூபா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் வாகீத்தை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். பயங்கரவாதிகளுடன் தொடர்பிலிருந்ததாக கூறி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் காஷ்மீர் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில மாதங்களுக்கு முன் ஹிஸ்புல் முஜாஹிதின் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிலிருந்ததாக டி.எஸ்.பி., தாவேந்தர் சிங் கைது செய்யப்பட்டார். அவருடன் பயங்கரவாதி நாவீத் பாபு, ஷபி மிர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ஷபி மிர்ரின் அலைபேசி பதிவுகளை ஆராய்ந்த போது அவர் வாகீத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததை கண்டறிந்ததாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறினர். அவரிடம் நடத்திய விசாரணையில், 2019 லோக்சபா தேர்தலின் போது மெஹபூபாவுக்காக வாகீத் தனது உதவியை நாடியதாக கூறியுள்ளார்.


latest tamil news





கொடுமைக்கு எல்லை இல்லை


இந்த கைது நடவடிக்கையை மெஹபூபா கடுமையாக கண்டித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மத்திய அரசின் கொடுமை எல்லையின்றி செல்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் வாகீத் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய குடும்பத்தினரை சந்திக்க எனக்கு அனுமதி மறுத்துள்ளனர். எனது மகள் இல்திஜாவும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். அவரும் வாகீத்தின் குடும்பத்தினரை சந்திக்க விரும்பினார்.” என கூறியுள்ளார்.

பாதுகாப்பு காரணங்கள் கருதியே அனுமதி மறுத்ததாகவும் வீட்டுச் சிறையில் வைக்கவில்லை என்றும் போலீசார் கூறுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
28-நவ-202011:25:20 IST Report Abuse
Rasheel மார்க்கம் உலகம் முழுவதும் தீவிரத்தை மதத்திற்காக முன்னெடுக்கிறது. அதுவும் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் பெட்ரோலியம், போதை பொருள், கள்ள கடத்தல் வணிகத்தின் மூலம் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் அழிவுகளை உண்டாக்குகிறது.
Rate this:
Cancel
S.Bala - tamilnadu,இந்தியா
28-நவ-202011:21:20 IST Report Abuse
S.Bala காஷ்மீர சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பொழுது இந்த அடிமைகளை நாடு கடத்தியிருக்க வேண்டும்.இங்கு ஜனநாயகம் என்ற பெயரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக உலா வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதிமன்றங்களும் இவர்களுக்கு ஆதரவாக உள்ளன . அயல் நாடுகளில் இன்றைய காலகட்டத்திற்கேற்ப சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன . அனால் நாமோ இன்றும் நம் நாட்டின் பாதுகாப்பை பற்றி கவலை கொள்ளாமல் பழய ஓட்டை சட்டங்களை வைத்து கொண்டிருக்கிறோம் .எங்கு பொய் முடியப்போகிறதோ ? வாழ்க ஜனநாயகம் ....
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
28-நவ-202011:19:44 IST Report Abuse
Rameeparithi தீவிரவாத கும்பலின் நிழல்கள் தான் பல வாரிசுகள் அரசியல் செய்து நாட்டை நாசப்படுத்திக்கொண்டு இருப்பதை பாமர மக்களின் பார்வையில் இருந்து மறைக்கும் வித்தை கற்ற வியாபாரிகள், விழிப்போம் ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X