தைவான் நாடாளுமன்றத்தில் பறந்த பன்றி குடல்..!

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
அமெரிக்காவுடன் தைவான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தைவான் அதிபர் சாய் இங் வேன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது தைவான். அதன்படி ரேக்டோஃபாமைன் என்கிற ரசாயனம் கலந்த பன்றி

அமெரிக்காவுடன் தைவான் பல பொருளாதார ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சரிந்து உள்ள பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்த தைவான் அதிபர் சாய் இங் வேன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.



latest tamil news



இதனைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டது தைவான். அதன்படி ரேக்டோஃபாமைன் என்கிற ரசாயனம் கலந்த பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து தைவானுக்கு ஏற்றுமதி செய்ய தைவான் அரசு அனுமதி வழங்கியது. இந்த ரசாயனம் ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் சீனாவிலும் சுகாதார கேடு காரணமாக தடை செய்யப்பட்டது.

மேலும் இந்த ரசாயனம் கலந்த பன்றி இறைச்சி உடலுக்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனை தைவானுக்கு ஏற்றுமதி செய்ய ஆளுங்கட்சி அனுமதி வழங்கியது. இதனை எதிர்க்கட்சியான குபோமின்தாங் கடுமையாக எதிர்த்தது.


latest tamil news



இதனையடுத்து தற்போது தைவான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பன்றிகளின் குடலை கையில் எடுத்துக்கொண்டு அதனை ஆளும் கட்சி உறுப்பினர்கள்மீது வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தின் தரை முழுவதும் பன்றிக் குடல்கள் சிதறிக்கிடந்தன. வித்தியாசமான முறையில் இவ்வாறு ஆளுங்கட்சியை தைவான் எதிர்கட்சி எதிர்ப்பது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

எதிர்ப்பை காட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க செயல்களில் யாராவது ஈடுபடுவார்களா என்று ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
28-நவ-202010:15:13 IST Report Abuse
Amirthalingam Shanmugam மனுஷனுங்க குடலை உருவி வீசறதுக்கு முன்னாடி ஒரு முடிவை எடுத்துடுங்கப்பு.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28-நவ-202008:02:15 IST Report Abuse
sankaranarayanan நம்ம சுடலை சும்மாவா - குட்காவையே சட்டசபைக்குள் கொண்டுவர ஏற்பாடு செய்த தெலுங்கு சிங்கம். தொகுதியில் நின்று ஜெயித்து மக்களின் வாக்கைப் பெற்று மக்களின் குறைகளை எடுத்துரைப்பதற்கு பதிலாக குட்காவை சட்ட சபைக்குள் கொணர்ந்த சுடலை சிங்கம். இவரையே தைவான்காரர்கள் மிஞ்சிவிட்டார்கள் சுடலையிடம் பயிற்சி பெற்றுருப்பார்கள் போலிருக்கு ?
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
28-நவ-202005:54:02 IST Report Abuse
Indhuindian நம்மள பாத்து இவங்க கத்துக்காரங்களா இல்லே அவங்கள பாத்து நாம கத்துக்குறோமா ஒண்ணுமே தெரியலேயே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X