பொது செய்தி

இந்தியா

கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்

Updated : நவ 28, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: கோவிட் தடுப்பூசி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மூன்று நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இது குறித்து கூறப்படுவதாவது: பிரதமர் மோடி இன்று ( 28 ம் தேதி) சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய குஜராத் மகாராஷ்டிரா, மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள

புதுடில்லி: கோவிட் தடுப்பூசி மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மூன்று நகரங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.



latest tamil news


இது குறித்து கூறப்படுவதாவது: பிரதமர் மோடி இன்று ( 28 ம் தேதி) சனிக்கிழமை கொரோனா தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்தி செயல்முறைகளை தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்ய குஜராத் மகாராஷ்டிரா, மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அருகே உள்ள சங்கோடர் தொழிற்துறை பூங்காவில் அமைந்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துவரும் ஜைகோவி-டி முதல்கட்ட சோதனை முடிந்து இரண்டாம் கட்ட சோதனையை துவங்கி உள்ளது. இதனை பிரதமர் பார்வையிடுகிறார்.

தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவைப் பார்வையிடுகிறார்.இந்த நிறுவனம் சர்வதேச மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தடுப்பூசிக்கான மருந்தை தயாரித்து வருகிறது.


latest tamil news


பின்னர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே ஜீணோம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு செல்கிறார். இந்நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக கோவாக்சின் என்னும் மருந்தின் 3 ம் கட்ட சோதனையை மேற்கொண்டுவருகிறது. இதனை பார்வையிட்ட பின்னர் மீண்டும் தலைநகர் டில்லி திரும்புகிறார்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் பீகாரிகளுக்கு இலவசமா தடுப்பூசி தருவோம்னு சொல்லிட்டேம்பா பாத்து ஏதாவது செஞ்சு ரெடி பண்ணுங்கப்பான்னு ஊர் ஊரா அலையறாரோ?
Rate this:
Cancel
venkata achacharri - india,இந்தியா
28-நவ-202009:09:13 IST Report Abuse
venkata achacharri புதிய மிக அதிக விலையில்லா விமானத்தை உபயோகப்படுத்த இனி உள்நாட்டு யாத்திரை
Rate this:
Cancel
28-நவ-202008:05:05 IST Report Abuse
ஆப்பு இஸ்ரோவுல போய் உக்காந்த போது நடந்த மாதிரி ஆயிடப் போகுது. இந்த நிறுவனங்களை காணொளி மூலம் ஆய்ந்தா போறாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X