புதுடில்லி: கொரோனாவுக்கான தடுப்பூசிஇல்லாமல் அலுவலகம் செல்லும் இந்தியர்களில் 83 சதவீதம் பேர் பதற்றமாக உள்ளனர் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
![]()
|
ஐ.டி.,துறையை சேர்ந்த அட்லாசியன் நிறுவனம் இது குறித்த ஆய்வை நடத்தியது. இதில் 83 சதவீத ஊழியர்கள் தடுப்பூசி இல்லாமல் அலுவலகத்திற்கு செல்வதில் பதற்றமாக உள்ளதாகவும் , 78 சதவீதத்தினர் வீட்டில் இருந்து வேலை செய்வதற்காக கொரோனாவை ஒரு காரணமாக கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான ஊழியர்கள், கொரோனாவிற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய சூழ்நிலை சிறப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் குழுவாக செயல்படும் போது ஒற்றுமை அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு நிறுவனங்களின் மேலாளர்கள் கூறுகையில் கொரோனா தொற்று நிர்வாக பிரிவில் மாற்றத்தை தூண்டி உள்ளது என தெரிவித்துள்ளனர்.
![]()
|
எதிர்காலத்தில் பணியில் உள்ள ஒத்துழைப்பு மற்றும் நட்புறவு குறித்து புதிய சூழ்நிலையை உருவாக்கும் என ஆராய்ச்சி முடிவு தெரிவிப்பதாக அட்லாசியன் ஐ.டி.துறையின் பொறியியல்துறை தலைவர் தினேஷ்அஜ்மீரா தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement