ஐதராபாத்:: ஐதராபாத் மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.ஐதராபாத் விடுதலை தினம் கொண்டாடப்படும் என பா.ஜ., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
![]()
|
1 -ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. 4-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. மாநகராட்சி தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ., தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
இதன் ஒரு பகுதியாக தேர்தல் அறிக்கை வெளியிட்பட்டுள்ளது. பா.ஜ., தலைவர்களில் ஒருவரான தேவேந்திரபட்னாவிஸ் தேர்தல்அறிக்கையை வெளியிட்டார்.மேலும் உள்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி, தேசிய பொதுச் செயலாளர் பூபேந்தர் யாதவ், கட்சி மாநிலத் தலைவர் பாண்டி சஞ்சய், தேசிய துணைத் தலைவர் டி.கே. அருணா, ஓபிசி தேசியத் தலைவர் டாக்டர் கே. லக்ஷ்மன், தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் விவேக் வெங்கட்ட சுவாமி உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
![]()
|
தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது
* மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்றால் ஐதராபாத் விடுதலை தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 1947 ஆக.,15 இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது.
ஐதராபாத்திற்கு 1948 செப்.,17 ல் சுதந்திரம் கிடைத்தது.
* தெலங்கானா ராஷ்டிரிய சமிதி அரசால் துவங்கப்பட்ட நில ஒழுங்குமுறை சட்டம் ரத்து செய்யப்படும்.
* ஐதராபாத்தில் மெட்ரோ மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் பயணிகளுக்கு இலவச பயணம்.
* அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளை வழங்கும். அனைத்து வீடுகளுக்கும் இலவச குடிநீர் வழங்கப்படும்.
* வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25,000 ரூபாய் வழங்கப்படும். ஏற்கனவே 10,000 இழப்பீடு பெற்ற குடும்பங்களுக்கு மீதமுள்ள தொகை 15,000 ரூபாய் கிடைக்க வழி வகை செய்யப்படும்.
* ஜிஹெச்எம்சி பகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச கோவிட் -19 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் தடுப்பூசி போடுவதற்காக யாரும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை.
* ஐதராபாத்தில் உள்ள பல்வேறு இடங்களின் மக்கள்தொகைக்கு ஏற்ப பிரத்தியேக ஆரம்ப சுகாதார நிலையங்களை (பி.எச்.சி) அமைக்கப்படும்.
* ஐதராபாத் பகுதியில் உள்ள ஏழைகளுக்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.வி) திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகளை கட்ட நிதி உதவி அளிக்கப்படும்
* மாணவர்களின் ஆன்லைன் கல்வி கற்பதற்காக ஏழைக் குடும்பங்களுக்கு தரமான வைஃபை வழங்கப்படும்.
* மாதத்திற்கு 100 யூனிட்டுகளுக்கு குறைவாகப் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம். பாரம்பரிய தொழில்களில் உள்ள அனைத்து தொழில்களுக்கும் இலவச மின்சாரம் மற்றும் கடன் வசதி செய்து தரப்படும் என்பன உள்ளிட்டவை தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE