பா.ஜ., தலைவர் முருகன்: தமிழகத்தில், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. தமிழகம் குட்டிச்சுவராகி விடும். பெண்களுக்காக குரல் கொடுப்பதாக கூறும், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி, அக்கட்சியின் எம்.எல்.ஏ., பூங்கோதை ஆலடி அருணா விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?
'டவுட்' தனபாலு: உலகில் பெண்களுக்கு எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் குரல் கொடுக்கும் கனிமொழி, இந்த விஷயத்தில் மவுனம் சாதித்தது, பல விதமான, 'டவுட்'டுகளை, கட்சியினர் மத்தியிலேயே கிளப்பியுள்ளது. எனினும், அது உட்கட்சி விவகாரம் என்பதால், மவுனமாக உள்ளாரோ?
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், கால்நடைத் தீவன ஊழல் கதாநாயகன் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ்: பீஹாரில், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி., என, எந்த பொறுப்பிலும் இல்லாத, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவரை, கல்வி அமைச்சராக, நிதிஷ்குமார் நியமித்துள்ளார். அதற்கான நிர்பந்தம் என்ன என்பதை, அவர் விளக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: நாட்டையே உலுக்கிய, பல ஆயிரம் கோடி ரூபாய், கால்நடைத் தீவன ஊழலில் சிக்கியுள்ள உங்கள் தந்தை, இன்னமும் சிறையில் உள்ளார். இந்நிலையில், பீஹார் முதல்வராக வேண்டும் என, நீங்கள் தேர்தலில் போட்டியிட்டீர்களே, அது ஏன் என்ற, 'டவுட்'டுக்கு முதலில் பதில் சொல்லுங்க!
பத்திரிகை செய்தி: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், நாடு முழுதும் உள்ள, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கு, அதை முதற்கட்டமாக வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த பட்டியல் தயாரிப்பு பணியில், மத்திய - மாநில அரசுகள் மும்முரமாக இறங்கியுள்ளன.
'டவுட்' தனபாலு: கொரோனாவை எதிர்த்து போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு, தடுப்பு மருந்து வழங்கப்பட வேண்டும் என்பதில், யாருக்கும் எந்த எதிர்ப்பும் இருக்காது. ஆனால், அந்த மருந்து எப்போது சப்ளையாகும் என்ற, 'டவுட்' இன்னும் கிளியர் ஆகவில்லையே!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE