சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

கும்மியடிக்கும் குள்ள நரிகள்!

Added : நவ 27, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
கும்மியடிக்கும் குள்ள நரிகள்!என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' நோய் பரவலை காரணம் காட்டி, ஊரடங்கு தடை உத்தரவு போட்டது, உண்மையில் அமலில் இருக்கிறதா என்பது, இப்போது மிகப் பெரிய கேள்விக்குறி.ஒரு பக்கம், 'வேல் யாத்திரை' என்ற பெயரில், தமிழக, பா.ஜ., தலைவர்கள் பண்ணும் அலப்பறை கொஞ்சமல்ல. இன்னொரு பக்கம், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் உதயநிதி

கும்மியடிக்கும் குள்ள நரிகள்!

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கொரோனா' நோய் பரவலை காரணம் காட்டி, ஊரடங்கு தடை உத்தரவு போட்டது, உண்மையில் அமலில் இருக்கிறதா என்பது, இப்போது மிகப் பெரிய கேள்விக்குறி.ஒரு பக்கம், 'வேல் யாத்திரை' என்ற பெயரில், தமிழக, பா.ஜ., தலைவர்கள் பண்ணும் அலப்பறை கொஞ்சமல்ல. இன்னொரு பக்கம், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பரப்புரை என்ற பெயரில் செய்கிற, அழிச்சாட்டியமும் அதிகரித்துள்ளது.உயர் போலீஸ் அதிகாரியின் பெயரைச் சொல்லி, 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், கடும் நடவடிக்கை எடுப்போம்' என, ரொம்ப தெனாவட்டாக மிரட்டல் விடுக்கிறார், உதயநிதி. தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அது மட்டுமா நடக்கும்?இது ஒரு புறம் இருக்க, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தன் பங்கிற்கு ஏதோ போராட்டம் நடத்தப் போகிறாராம். பழையபடி மரங்களை வெட்டி, சாலையில் போட்டு, போக்குவரத்தை தடை செய்யப் போகிறார் போலும்.ஒன்று மட்டும் மிகத் தெளிவாக தெரிகிறது.இன்றைக்கு, ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தால், இந்த அரசியல் வியாபாரிகள் எல்லாம், இப்படி உருட்டல் மிரட்டல் விடுத்திருக்க மாட்டார்கள்.போலீஸ் உயர் அதிகாரியை மிரட்டும் உதயநிதிக்கு, ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறோம். அது, அவரது தாத்தா கருணாநிதியின் கைது சம்பவம். போலீசாரின் பிடியின் வலிமை உணர்ந்து, 'அய்யோ கொல்றாங்களே...' என்று அலறினார், கருணாநிதி. அதை, உதயநிதி மறந்து போயிருக்கலாம்; ஆனால், தமிழர்கள் மறக்கவில்லை.அ.தி.மு.க.,வில் துணிச்சல் மிக்க தலைவர் இப்போது இல்லாததால் தான், குள்ளநரிகள் எல்லாம், கும்மி அடித்து, குத்தாட்டம் போடுகின்றன.முதல்வர் இ.பி.எஸ்., அதிரடி நடவடிக்கையில் இறங்கி, தன் அதிகாரம் என்ன என்பதை உணர்த்த வேண்டும். இந்நேரத்தில், அது தான் சரி.


வெட்ட வெளிச்சமாக்கியஅமித் ஷா!சி.கார்த்திகேயன், சாத்துார், விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சர் வந்து செல்வது, அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல; ஆனால், அ.தி.மு.க., அரசு காட்டிய ஆர்வம், அதை ஊதி பெரிதாக்கி விட்டது.இதற்கு முன், தமிழகத்தில் இப்படி எப்போதும் நடந்ததே இல்லை. முதல்வரும், துணை முதல்வரும், விமான நிலையத்தில் காத்துக் கிடந்து, மத்திய அமைச்சர் ஒருவரை வரவேற்றது, இது, ஜெ., வழி நடத்திய, அ.தி.மு.க., அரசுதானா என, அப்பாவி தொண்டர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.தமிழகத்தில், பா.ம.க., - தே.மு.தி.க.,வை விட, குறைந்த ஓட்டு சதவீதம் உள்ள, பா.ஜ.,வுடன் முதல் ஆளாக சென்று, கூட்டணி உடன்பாடு முடித்து விட்டதை, அ.தி.மு.க.,வினரால் ஏற்கவே முடியவில்லை. அப்படி என்ன அவசரம் இப்போது?எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த, அ.தி.மு.க., இன்று, பா.ஜ.,வின் பிடியில் இருப்பது, அப்பட்டமாக வெளியே வந்துள்ளது.கட்சியின் தலைவராக, அமித் ஷாவும், அ.தி.மு.க., தலைவர்களும் அரசியல் பேசுவது ஒன்றும் தவறில்லை; ஆனால், அரசு நிகழ்ச்சியில் அப்படி நிகழ்வது, ஏற்புடையது அல்ல!தமிழகத்தில் நடக்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் போன்றோர் தலைமை ஏற்கும் சூழலில், இவர்களை தவிர்த்து, மத்திய அமைச்சரான அமித் ஷாவை தலைமை ஏற்க வைத்தது, அரசியல் பிழையே!பீஹார் ஸ்டைலில் ஆட்சியை பிடிப்பது, துணை முதல்வர் பதவிகளை வாங்குவது, நிதிஷ்குமார் போன்றே, இ.பி.எஸ்.,சை, 'டம்மி' யாக்குவது போன்ற வேலையை செய்ய வந்த அமித் ஷாவை, அ.தி.மு.க., தலைமை விரும்பி வரவேற்பது, கட்சிக்கு நல்லதா?ஆக மொத்தத்தில், அமித் ஷாவின் வருகை, பா.ஜ.,வின் பிடிக்குள், அ.தி.மு.க., இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது.


தொடரட்டும்ஆரோக்கியமானபோட்டி!கு.அருண், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அதிகமாக செலவு செய்தால் தான், தரமான கல்வி கிடைக்கும் என்ற நிலையை, நம் அரசியல்வாதிகள் உருவாக்கி விட்டனர். தமிழகம் முழுதும், சி.பி.எஸ்.சி., மற்றும் மெட்ரிக் பள்ளிகள் நுாற்றுக்கணக்கில் முளைத்தன.அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மதிப்பெண் அடிப்படையில், அரசு பொறியியல் அல்லது மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைப்பது, அரிதாக போனது. அதிலும், ஏழை மாணவரின் மருத்துவ கனவானது, முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டக் கதையாக மாறியது.மருத்துவ படிப்பிற்கு, 'நீட்' தேர்வு வந்த பின், அரசு பள்ளி மாணவர்களுக்கு, டாக்டர் சீட் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில், 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதால், 405 இடங்கள் கிடைத்துள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது.அதே நேரத்தில், இந்த மாணவர்களில் பெரும்பாலானோரால், மருத்துவ படிப்பிற்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணத்தைக் கூட கட்ட முடியாது என்பது தான், உண்மையாகும். இதையடுத்து, மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்துள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை, தி.மு.க., ஏற்கும் என, அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளது, பாராட்டத்தக்கது.இதை தொடர்ந்து, மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்துள்ள, அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, தமிழக அரசே ஏற்கும் என, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளது, வரவேற்கத்தக்கது.மாணவர்களின் ஏழ்மையை கருதி, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாதவாறு, 'போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார்.தமிழக அரசே, மாணவர்களின் நிதி சுமையை ஏற்றுக் கொள்வதால், தி.மு.க., ஏழ்மையான மாணவர்களின் மேற்படிப்புக்கு
உதவலாம்.கல்வி விஷயத்தில், இரு கட்சிகளுக்கு இடையே, ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டுள்ளது, வரவேற்கத்தக்கது!

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
28-நவ-202018:33:10 IST Report Abuse
Anantharaman Srinivasan அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தொகையை அரசு ஏற்பதால் அரசின் சுமை அதிகமாகும். இதெல்லாம் தேர்தலை மனதில் வைத்து செய்யப்படும் முடிவுகள். வரும் காலத்தில் டாக்டர் களின் தரம் குறையும்..
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
28-நவ-202016:25:37 IST Report Abuse
Loganathan Kuttuva ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை படித்து முடித்தாலும் அரசு மருத்துவமனைகளில் வேலை கிடைத்தால் தான் அதிக வருமானம் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் அதிக ஊதியம் கிடைக்காது.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
28-நவ-202009:06:31 IST Report Abuse
Darmavan சி கார்த்திகேயன் கட்டுமர கட்சியின் அடிமை போல் தெரிகிறது.தீய சக்தி நாட்டுக்கு கேடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X