நவ., 28, 1927
கோவையில், 1927 நவ., 28ம் தேதி பிறந்தவர், ஹெச்.வி.ஹெண்டே. இவரது முன்னோர், மங்களூரில் இருந்த காரணத்தால், 'மங்களூரார்' என்றும் அழைக்கப்படுகிறார். மருத்துவரான இவர், சுதந்திராக் கட்சி வேட்பாளராக, 1967, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின், அ.தி.மு.க.,வில் இணைந்தார். 1980ல் நடந்த தேர்தலில், அண்ணா நகர் சட்டசபை தொகுதியில், 699 ஓட்டுகள் வித்தியாசத்தில், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியிடம் தோற்றார்.எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில், 1977 முதல், 1987 வரை, 10 ஆண்டுகள், சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்; பின், பா.ஜ.,வில் இணைந்தார். அக்கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். பல புத்தகங்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு, மருத்துவராக சிகிச்சை அளித்துள்ளார். மருத்துவர் ஹெச்.வி.ஹெண்டே பிறந்த தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE