பொது செய்தி

இந்தியா

பாதிப்பு 93 லட்சத்தை கடந்தது 87.18 லட்சம் பேர் குணம்

Added : நவ 27, 2020
Share
Advertisement
புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று, 93 லட்சத்தை கடந்தது; இவர்களில், 87.18 லட்சத்துக்கும் மேலானோர் குணமடைந்து உள்ளனர்.கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில் நடந்த பரிசோதனைகளில், 43 ஆயிரத்து, 082 பேரிடம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதனால், நாட்டில் கொரோனா பாதிப்பிற்குள்ளானோர் எண்ணிக்கை, 93

புதுடில்லி:கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று, 93 லட்சத்தை கடந்தது; இவர்களில், 87.18 லட்சத்துக்கும் மேலானோர் குணமடைந்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:கடந்த, 24 மணி நேரத்தில் நடந்த பரிசோதனைகளில், 43 ஆயிரத்து, 082 பேரிடம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.இதனால், நாட்டில் கொரோனா பாதிப்பிற்குள்ளானோர் எண்ணிக்கை, 93 லட்சத்து, 9 ஆயிரத்து, 787 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில், 4.55 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இது ஒட்டுமொத்த பாதிப்பில், 4.89 சதவீதம்.

மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கையால், கொரோனா பாதிப்பில் இருந்து, 87 லட்சத்து, 18 ஆயிரத்து, 517 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 93.64 சதவீதமாக உள்ளது.கொரோனாவால் கடந்த ஒரே நாளில், 492 பேர் உயிரிழந்துள்ளனர். டில்லியில் அதிகபட்சமாக, 91 பேரும், மஹாராஷ்டிராவில், 65; மேற்கு வங்கத்தில், 52; உத்தர பிரதேசத்தில், 30; கேரளாவில், 27; பஞ்சாபில், 26; ஹரியானாவில், 25 பேரும் பலியாகி உள்ளனர்.

இதனால், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 35 ஆயிரத்து, 715 ஆக உயர்ந்துள்ளது; இறப்பு விகிதம், 1.45 சதவீதமாக உள்ளது. மஹாராஷ்டிராவில், 46 ஆயிரத்து, 813 பேர் உயிர் இழந்துள்ளதால், கொரோனா பலியில், இம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, 11 ஆயிரத்து, 726 பேருடன் இரண்டாம் இடத்திலும், 11 ஆயிரத்து, 669 பேருடன் தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.

கொரோனா பாதிப்பை கண்டறிய கடந்த, 24 மணி நேரத்தில், 11.31 லட்சம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.இவர்களுடன், நாடு முழுதும் இதுவரை பரிசோதனைக்கு உள்ளானோர் எண்ணிக்கை, 13.70 கோடியை கடந்துள்ளது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X