பொது செய்தி

இந்தியா

உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி.

Updated : நவ 29, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற சர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.உலகம் முழுதும், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வி தரம், மாணவர் -- ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள்
உலகின் சிறந்த கல்வி நிறுவனங்கள், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்தது

புதுடில்லி: சர்வதேச அளவிலான, சிறந்த, 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., இடம்பிடித்துள்ளது. உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியல, க்யூ.எஸ்., எனப்படும், குவாக்குவரேலி சிமண்ட்ஸ் என்ற சர்வதேச நிறுவனம், ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது.

உலகம் முழுதும், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், அதன் கல்வி தரம், மாணவர் -- ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருதுகள், சாதனைகள், மாணவர்கள் விகிதம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் தரம் பிரிக்கப்படுகிறது. இதன்படி, 2021ம் ஆண்டில், உலக அளவிலான சிறந்த கல்வி நிறுவன பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், உலக அளவில், சிறந்த கல்வி நிறுவனம் என்ற முதல் இடத்தை, அமெரிக்காவின், எம்.ஐ.டி., எனப்படும், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் பெற்றுள்ளது.அடுத்த இரண்டு இடங்களையும், அமெரிக்காவின் ஸ்டாண்போர்டு மற்றும் ஹாவர்டு பல்கலைக்கழகங்கள் பிடித்துள்ளன.உலக அளவில், சிறந்த, 500 கல்வி நிறுவனங்களில், இந்தியாவை சேர்ந்த எட்டு கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்து உள்ளன. மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்துக்கு, 172வது இடம் கிடைத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி., 275வது இடத்தில் உள்ளது. இதை தவிர, ஐ.ஐ.டி., டில்லி, கரக்பூர், கான்பூர், ரூர்கி, கவுஹாத்தி மற்றும் கர்நாடகாவின் பெங்ளூருவில் உள்ள, ஐ.ஐ.எஸ்சி., எனப்படும், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவை இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடான, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், ஆசிய அளவில், சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-நவ-202012:58:28 IST Report Abuse
Dr. Suriya அண்ணாவுக்கு அல்வா கொடுத்துட்டாங்களே .... இது ஆரியர்களின் சூழ்ச்சி என்று கூவ ஒரு கூட்டம் வரும் பாருங்களேன்.....
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
28-நவ-202008:41:23 IST Report Abuse
VENKATASUBRAMANIAN அண்ணா பல்கலைக்கழகம் எங்கே. இங்குள்ள கல்வியாளர்கள் என்ற பெயரில் கூவினர்களே. சுரப்பாவை குறை சொன்னார்களே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-நவ-202004:38:37 IST Report Abuse
J.V. Iyer சிறிய நாடு சிங்கப்பூர். இதில் NUS க்கு உலகில் பதினோராவது இடம். NTU வுக்கு பதிமூன்றாம் இடம். இந்த இரண்டும் பல்லாண்டுகளாக டாப் ரேங்கில் உள்ளன. இதை பார்த்து இந்திய கல்வி நிறுவனங்கள் முயற்சி செய்யவேண்டும்.
Rate this:
Anand - chennai,இந்தியா
28-நவ-202010:28:09 IST Report Abuse
Anandசூசை மாதிரி அரசியல் வியாதிகள் இன்னும் தொடர்ந்தால் இந்திய கல்வி நிறுவனங்கள் உலகின் கடைசி இடத்திற்கு தள்ளப்படும்....
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
28-நவ-202013:38:39 IST Report Abuse
Dr. Suriyaஇந்திய கல்வி நிறுவனங்கள் என்று சொல்லாதீர்கள் தமிழக அரசு கல்வி நிறுவனங்கள் என்று சொல்லுங்கள் ...தமிழக தனியார் கல்வி நிறுவனங்கள் சுரண்டி கொழுக்க சுடலையின் போராட்டம் தொடரும் ஹிந்தி படிக்காதே ...அனைவரும் ஆல் பாஸ் போடு என்று.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X