அரசியல் செய்தி

தமிழ்நாடு

புயலால் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

Updated : நவ 29, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:'நிவர்' புயல் காரணமாக இறந்தவர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:'நிவர்' புயல் காரணமாக, உயிர் சேதம் தடுக்க, அரசு கடும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை களை எடுத்தது. எனினும், எதிர்பாராமல், நான்கு பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, மாநில பேரிடர்
 புயலால் இறந்தவர்கள்  குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

சென்னை:'நிவர்' புயல் காரணமாக இறந்தவர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் மற்றும் கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிக்கை:

'நிவர்' புயல் காரணமாக, உயிர் சேதம் தடுக்க, அரசு கடும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை களை எடுத்தது. எனினும், எதிர்பாராமல், நான்கு பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, நான்கு லட்சம் ரூபாய்; முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து, ஆறு லட்சம் ரூபாய் என, தலா 10 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.


புயலின் போது, 61 மாடுகள், ஐந்து எருதுகள், 65 கன்றுகள், 114 ஆடுகள் இறந்துள்ளன. இறந்த மாடு ஒன்றுக்கு, 30 ஆயிரம் ரூபாய்; எருதுக்கு, 25 ஆயிரம் ரூபாய்; கன்றுக்கு, 16 ஆயிரம் ரூபாய், ஆட்டுக்கு, 3,000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.புயல் காரணமாக, 302 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு, உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.


புயல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில், 108 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன; 2,927 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளன.
மரங்கள் விழுந்ததால் சேதமடைந்த, மின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணிகளை மேற்கொள்ள, மின்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, உரிய திட்டங்கள் வகுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

'நிவர்' புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு, இழப்பீட்டு தொகை பெற்றுத் தரவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.


முதல்வருடன் பிரதமர் பேச்சு


பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தமிழக முதல்வரை தொடர்பு கொண்டு, புயல் பாதிப்பு விபரங்களை கேட்டறிந்தார். பிரதமர் மோடி நேற்று இரவு, 9:00 மணிக்கு, முதல்வர் இ.பி.எஸ்.,சை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, 'நிவர்' புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்திற்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், முதல்வரிடம் பிரதமர் உறுதி அளித்தார்.


Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.ELUMALAI - Chennai,இந்தியா
28-நவ-202018:46:12 IST Report Abuse
C.ELUMALAI அறிக்கை மன்னன்,போடும் ஒவ்வொரு பந்தையும்,சிக்ஸர், பவுண்டரியாகவும் அடித்தால் எப்படி சார்?.
Rate this:
Cancel
பச்சையப்பன் , கோபால் புரம். அடக் கடவுளே ! 10 லட்சம் எந்த மூலைக்கு? புயலை தடுக்க முடியாத அரசின் கையாலாகத தனத்தை மறைக்க 10 லட்சமா??? புயலால் இறந்தவர்களுக்கு 50 லட்சம் பணமும் குடும்பத்தில் இருவருக்கு அரசு வேலையும் தரவேண்டும்.
Rate this:
Cancel
28-நவ-202009:46:56 IST Report Abuse
ஆரூர் ரங் சிறுபான்மையின சிறுவன் தந்தை வெட்டிய குழியில் விழுந்தால் 50 லட்சம் ? பாவப்பட்ட இவங்களுக்கு 10 ? நல்ல நியாயமிது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X