திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், 'நிவர்' புயல் மழை நீரால், 178 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 'நிவர்' புயல் காரணமாக, இரண்டு நாட்களாக, பலத்த மழை பெய்தது. நேற்று காலை, முதல், மழை பெய்யவில்லை. இருப்பினும், வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.178 ஏரிகள் சதம்மாவட்டத்தில், பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில், 576 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில், 654 சிறு அளவிலான ஏரிகளும் உள்ளன.மேலும், 3,227 குளம், குட்டைகள் உள்ளன. இவற்றில், ஆரணி ஆறு வடிநில கோட்டத்தில், 123 ஏரிகள் நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன.
50 - 90 சதவீதம் வரை, 124 ஏரிகள் நிரம்பி உள்ளன.கொற்றலை ஆறு நீர்பாசன பகுதியில், 55 ஏரிகள் நுாறு சதவீதம் நிரம்பி உள்ளன. 50 - 90 சதவீதம் வரை, 124 ஏரிகளும், 50 சதவீதத்திற்குள், 276 ஏரிகளும் நிரம்பி உள்ளன.நேற்று காலை நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக, ஆர்.கே.பேட்டையில், 12.9 செ.மீட்டர் மழை பதிவாகியது. மழையளவு விபரம்:இடம் மழையளவு (செ.மீட்டரில்)ஆர்.கே.பேட்டை 12.9பள்ளிப்பட்டு 5திருவள்ளூர் 2.5திருத்தணி 2.3பொன்னேரி 1.8ஜமீன் கொரட்டூர் 1.8ஊத்துக்கோட்டை 1.5பூண்டி 1.5கும்மிடிப்பூண்டி 1.1திருவாலங்காடு 1.0சோழவரம் 1.0செங்குன்றம் 1.0பூந்தமல்லி 0.9
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE