திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வன்னியடி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம், நேற்று நடைபெற்றது.
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, நால்வர்கோவில் பேட்டையில், வன்னியடி விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில், மகா கணபதி ஹோமம், திருவிளக்கு பூஜை, புனிதநீர் பூஜையுடன் துவங்கியது.தொடர்ந்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, வன்னியடி விநாயகருக்கு, மகா கும்பாபிஷேக விழா, விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர். இரவு, சுவாமி வீதி உலா நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE