விழுப்புரம் : கொரோனா பரவல் காலத்தில் தமிழக அரசால் வழங்கப்பட்ட 1000 ரூபாய் கிடைக்காத மாற்றுத்திறனாளிகள் விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் இளவழகன் செய்திக்குறிப்பு;சென்னை ஐகோர்ட் உத்தரவின்படியும், கொரோனா பரவல் பொது முடக்கம் காரணமாக பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் சிறப்பு உதவி தொகையாக 1000 ரூபாய் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இதுவரை இந்த உதவித்தொகை பெறாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வாங்க இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் வாங்க இயலாதவர்கள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம்.
நேரில் வர முடியாதவர்கள் 04146 228000 என்ற தொலைபேசி எண்ணிலும், dlsavillupuram@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும் தகவல் அனுப்பி பயன்பெறலாம்.இதேபோன்று, கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், திண்டிவனம், செஞ்சி, வானுார் ஆகிய நீதிமன்றங்களில் இயங்கி வரும் சட்டப்பணிகள் குழுவை அணுகி மனு கொடுத்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE