விருத்தாசலம் : விருத்தாசலத்தில் புயல் நிவாரணப் பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி ஆலோசனை நடத்தினார்.
விருத்தாசலம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி தலைமை தாங்கினார். சப் கலெக்டர் பிரவீன்குமார், டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், நேர்முக உதவியாளர் அரங்கநாதன், தாசில்தார் சிவக்குமார், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பாண்டு உட்பட நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரம், வேளாண் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த கலெக்டர், நிவாரண பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினார். மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களை உடனடியாக கணக்கெடுத்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE