சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ம.க., இட ஒதுக்கீடு போராட்டம்

Added : நவ 27, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : சென்னையில் நடக்கும் இட ஒதுக்கீடு போராட்டத்தில், கடலுார் மேற்கு மாவட்டம் சார்பில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.விருத்தாசலத்தில், பா.ம.க., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் மோகன், மாவட்ட துணை செயலர்கள் கருணாநிதி, குணசேகரன், மாநில செயற்குழு

விருத்தாசலம் : சென்னையில் நடக்கும் இட ஒதுக்கீடு போராட்டத்தில், கடலுார் மேற்கு மாவட்டம் சார்பில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.

விருத்தாசலத்தில், பா.ம.க., மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் மோகன், மாவட்ட துணை செயலர்கள் கருணாநிதி, குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் வீரகோவிந்தன், இளைஞர் சங்க செயலாளர்கள் ஞானவேல், லட்சுமணன், மாவட்ட மகளிரணி செயலாளர் சத்யபானு, இளைஞர் சங்க அமைப்பு செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் விஜயகுமார் வரவேற்றார்.

மாநில துணை பொதுச் செயலாளர் அசோக்குமார் ஆலோசனை வழங்கி, பேசினார்.கூட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தபடி, வரும் 1ம் தேதி, சென்னையில் நடக்கும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் மேற்கு மாவட்டம் சார்பில் 30 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் உள்ள மூத்த நிர்வாகிகள் ஆலோசனையின்படி, அனைத்து வன்னியர்களையும் ஒருங்கிணைத்து அறவழி போராட்டங்களில் பங்கேற்க செய்ய வேண்டும்.

வரும் 10ம் தேதி, மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட வி.ஏ.ஓ., அலுவலகங்களில் இட ஒதுக்கீடுக்கான மனுக்களை வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால், ஜனவரி மாதம் மிகப்பெரிய அளவில் பா.ம.க., வன்னியர் சங்கம் இணைந்து போராட்டம் நடத்த களப்பணியாற்றுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர தலைவர் ஏழுமலை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X