பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சை

Added : நவ 27, 2020
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 4ம் தேதி வரை நடக்கும் ஆண்களுக்கான நவீன வாசக்டமி முகாமில் தகுதியான ஆண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.வட்டார மருத்து அலுவலர் செந்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒரத்துார் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 21ம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துார் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வரும் 4ம் தேதி வரை நடக்கும் ஆண்களுக்கான நவீன வாசக்டமி முகாமில் தகுதியான ஆண்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டார மருத்து அலுவலர் செந்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒரத்துார் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 21ம் தேதி முதல் வரும் 4ம் தேதி வரை தகுதி வாய்ந்த ஆண்களுக்கான தழும்பில்லாத நவீன வாசக்டமி சிறப்பு கருத்தடை சிசிக்சை முகாம் நடக்கிறது.தகுதியான ஆண்கள் நவீன வாசக்டமி செய்து கொள்வதன் மூலம் தேவையில்லாத கருத்தரிப்பு ஏற்படாமல் ஆயுள் முழுவதும் பாதுகாப்பு கிடைக்கும்.

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ.1100 ஊக்கத் தொகை, அழைத்து வருபவர்களுக்கு ரூ.200 அரசு வழங்குகிறது. இதுவரை கருத்தடை செய்து கொள்ளாத தகுதி வாய்ந்த ஆண்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நவீன வாசக்டமி பற்றிய விவரங்களை 99436 53119 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X