சென்னை:சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் - புவனேஸ்வர், விழாக்கால சிறப்பு ரயில் உட்பட, 10 சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.
* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, ஒடிசா மாநிலம், புவனேஸ்வருக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில், ஜன., 1 வரையும்; புவனேஸ்வரில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிசம்பர், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன
* புவனேஸ்வரில் இருந்து, சென்னை எழும்பூர் வழியாக, புதுச்சேரிக்கு செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 29 வரையும்; புதுச்சேரியில் இருந்து, புவனேஸ்வருக்கு புதன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 30 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன
* புவனேஸ்வரில் இருந்து, சென்னை எழும்பூர் வழியாக, ராமேஸ்வரத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 25 வரையும்; ராமேஸ்வரத்தில் இருந்து, புவனேஸ்வருக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 27 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன
* ஒடிசா மாநிலம், புரியில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 27 வரையும்; சென்னை சென்ட்ரலில் இருந்து, புரிக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 28 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன
* புவனேஸ்வரில் இருந்து, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, கர்நாடகா மாநிலம், பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்துக்கு, ஞாயிற்றுகிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 27 வரையும்; பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்தில் இருந்து, புவனேஸ்வருக்கு செவ்வாய் கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில், டிச., 29 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE