மந்தாரக்குப்பம் : வடலுாரில் டி.ஆர்.,எம்., சாந்தி இல்ல திருமண விழா நடந்தது.
வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி பர்னிச்சர் உரிமையாளர் ராஜமாரியப்பன் நாடார் -சாந்தி தம்பதி மகன் இன்ஜினியர் கார்த்திக், மதுரை திருப்பரங்குன்றம் ராஜபாண்டி நாடார்- பூங்கொடி மகள் இன்ஜினியர் பிரியதர்சினி திருமணம் நேற்று வடலுார் டி.ஆர்.எம்., சாந்தி திருமண மண்டபத்தில் நடந்தது.ஞானாலய வள்ளலார் கோட்டம் இமயஜோதி திருஞானந்த சுவாமிகள் அருள் ஆசியுடன் திருமண விழா நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி, திடக்கழிவு மேலாண்மை தலைவர் ஜோதி மணி பங்கேற்றார்.
மதுரை நாடார் மகாஜன சங்க பொது செயலர் கரிக்கோல்ராஜ், நாடார் உறவின் முறை அறைக்கட்டளை தலைவர் வேல்சாமி சிறப்புரையாற்றினர். நெய்வேலி நாடார் மகாஜன சங்க தலைவர் திருமால் கொழுந்து வரவேற்றார்.நாடார் சங்க நிர்வாகிகள் குருசாமி, ஸ்டாலின் தங்கசாமி, ஜெயகீதன், கருப்பசாமி, தியாகுமணி வண்ணன், தங்கபாண்டியன், நிஜாமுதீன், பொன்னுத்துரை, ராஜேந்திரன், ராமசாமி, செல்லத்துரை, ஜெயச்சந்திரன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.
ஜெயின் ஜீவல்லரி உரிமையாளர் அகர்சந்த், ஆர்.பி.எஸ்., ஏஜென்சி பண்பாளன், நாடார் மரவாடி கந்தராஜ், கடலுார் மாவட்ட வரி பயிற்சியாளர் சங்க தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் சிங்காரவேலு, இணை செயலாளர் கோவிந்தராஜ், ஆர்.கே.,டிரேடர்ஸ் ராமலிங்கம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி ஜோசப், உதவி ஆசிரியர்கள் சாந்தி, மேரி, புஷ்பலதா, ஆரோக்கியதாஸ், லயோனா, கீதா மஞ்சித், கலாவதி வாழ்த்தினர்.
மேலும் வடலுார் அரிமா சங்க தலைவர் ராஜேந்திரன், கண்ணன், வேலன் குரூப் ஆப் கம்பெனிஸ் சிவசங்கர், அரிமா சங்க மண்டல தலைவர் சரவணன், அம்மன் எசன்ஸ் மார்ட் ரவீந்திரன், முத்து டியூசன் சென்டர் வேல்முருகன், வினாயகா ஏஜென்சி அசோக் குமார், பா.ஜ., மாவட்ட பொருளாளர் வினோத்குமார், பிரேமா ஸ்டோர் உரிமையாளர் கார்த்திகேயன், வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சியினர்கள், வியாபாரிகள், டி.ஆர்.எம்., சாந்தி ஏஜென்சீஸ் நிர்வாகிகள் கணேஷ்குமார், ஜீவானந்தம், நெப்போலியன் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர். டி.ஆர்.எம்., சசிதரன் நன்றி கூறினார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE