இது தான் கடைசி 'பரோல்': நீதிபதிகள் திட்டவட்டம்

Updated : நவ 29, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
புதுடில்லி :முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேரறிவாளனுக்கு, மேலும் ஒரு வாரம், 'பரோல்' வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 29 ஆண்டுகளாக சிறை தண்டனை
பேரறிவாளன் 'பரோல்'  ஒரு வாரம் நீட்டிப்பு

புதுடில்லி :முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பேரறிவாளனுக்கு, மேலும் ஒரு வாரம், 'பரோல்' வழங்கி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவர், தனக்கான தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு ஒரு வாரத்திற்கு பரோல் வழங்கி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பின், பிரதான கோரிக்கை தொடர்பான வழக்கை, இறுதி விசாரணைக்காக, அடுத்த ஆண்டு ஜன., 19க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையே, பேரறிவாளன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள, மேலும், 90 நாட்கள் பரோலை நீட்டிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமை யிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளனுக்கு ஏற்கனவே வழங்கப் பட்டுள்ள பரோலுடன், கூடுதலாக ஒரு வாரம் பரோலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும், பரோலை நீட்டிப்பது இதுவே கடைசி முறை என்றும், இதற்கு மேல் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
29-நவ-202009:30:26 IST Report Abuse
 Muruga Vel மகாராஷ்டிராவில் ஒண்ணாந்தேதி முதல் கோர்ட்டுகள் செயல்படும் என்று அறிவிப்பு ..23 டிசம்பர் முதல் குளிர் கால விடுமுறை ...
Rate this:
Cancel
VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
29-நவ-202009:23:44 IST Report Abuse
VeeJay Politicians should stay away from this. Why so many of them are supporting for this guy. Need to think about how many other families lost their loved ones.
Rate this:
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
29-நவ-202003:34:32 IST Report Abuse
chakra பிடிக்காவிட்டால் இத்தாலியன் மாபியா , ராஜிவ் கான் இல்லா விட்டால் ராஜிவ் காந்தி . ராஜீவை அடித்த இலங்கை வீரனுக்கு விருது கொடுத்தார்கள் . அதை தட்டி கேட்க தைரியம் இருக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X