உதயநிதி பிறந்த நாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதயநிதி பிறந்த நாள்

Added : நவ 27, 2020
Share
கடலுார் ; தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கடலுார் செல்லங்குப்பத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை மற்றும் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஐயப்பன் வழிகாட்டுதலில், கடலுார் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.லயன்ஸ் கிளப் தலைவர் தினகரன், ரோட்டரி

கடலுார் ; தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு கடலுார் செல்லங்குப்பத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை மற்றும் தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ஐயப்பன் வழிகாட்டுதலில், கடலுார் செல்லங்குப்பம் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.லயன்ஸ் கிளப் தலைவர் தினகரன், ரோட்டரி சங்கமம் தலைவர் சன் பிரைட் பிரகாஷ், வக்கீல் வினோத், வசூல்ராஜா, இளைஞரணி சரத், அன்பு, பிரபாகரன், சங்கர், காமேஷ், கார்த்தி வெள்ளப்பாக்கம் கார்த்தி, மனோஜ், மணிமாறன், ஷாருக், கண்ணதாசன் பங்கேற்றனர்.விருத்தாசலம்விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விருத்தாசலம் அடுத்த கொடுக்கூர் ஊராட்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திருஞானம், வசந்தகுமார், சண்முகம், ராஜவேல், சுபாஷ், பிரபு முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தர்மமணிவேல் வரவேற்றார்.தி.மு.க., கொடியேற்றி, கேக் வெட்டி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கிளை செயலாளர் சுப்ரமணியன், அவைத் தலைவர் கருணாநிதி, இளைஞரணி குழந்தைவேல், வெங்கடேசன், அருள்ராஜ், முத்துவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விஜயமாநகரம் ஊராட்சியில் நடந்த விழாவில், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜவேல், மாவட்ட பிரதிநிதி பாலகிருஷ்ணன், குமார், கிளை நிர்வாகிகள் மதியழகன், வெங்கடேசன், பாஸ்கர், பாக்யராஜ், வெங்கடேசன், செல்வராசு உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X