பொது செய்தி

தமிழ்நாடு

விருதை வள்ளலார் குடிலில் உதயநிதி பிறந்த நாள் விழா

Added : நவ 27, 2020
Share
Advertisement
விருத்தாசலம் : உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விருத்தாசலம் வள்ளலார் குடிலில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உணவு வழங்கப்பட்டது. பண்ருட்டி தி.மு.க., பிரமுகர், முந்திரி ஏற்றுமதியாளர்

விருத்தாசலம் : உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களில் உணவு வழங்கப்பட்டது.

தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விருத்தாசலம் வள்ளலார் குடிலில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியோருக்கு உணவு வழங்கப்பட்டது. பண்ருட்டி தி.மு.க., பிரமுகர், முந்திரி ஏற்றுமதியாளர் டி.ஆர்.வி., கேஷியூஸ் யுவராஜ் தலைமை தாங்கி, பழங்கள், பிஸ்கட், உணவு வழங்கினார்.

தொழிலதிபர் சந்திரசேகர், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் இளையராஜா உள்ளிட்ட தி.மு.க., பிரமுகர்கள், மன்ற நிர்வாகிகள் உடனிருந்தனர். திருவதிகை சித்தர் மடத்தில் தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது. கடலுார், பண்ருட்டி, விருத்தாசலம் பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உதவிகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X