பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கு திட்டையில் கும்பாபிேஷகம்

Added : நவ 27, 2020
Share
Advertisement
புவனகிரி : புவனகிரி அருகே வடக்கு திட்டையில் செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சப்தகன்னிகள் ஆலய நுாதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், கோமாதா பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதல் கால யாக

புவனகிரி : புவனகிரி அருகே வடக்கு திட்டையில் செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், சப்தகன்னிகள் ஆலய நுாதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், கோமாதா பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜையும், இரவு 10 மணிக்கு அஷ்டபந்தனம் நடந்தது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு விக்ன விநாயகர் பூஜையுடன் இரண்டாம் கால பூஜை துவங்கியது. பின் கடம் புறப்பாடு, சிவசுப்பிரமணியர் விமானத்தில் மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X