பொது செய்தி

இந்தியா

கோரிமேடு கலைவாணர் நகரில் புறக்காவல் நிலையம் திறப்பு

Added : நவ 27, 2020
Share
Advertisement
புதுச்சேரி: கலைவாணர் நகரில் புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி., அஜய் தங்கம் திறந்து வைத்தார்.கோரிமேடு அடுத்த கலைவாணர் நகரில், பட்டானுார் கலைவாணர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையத்தை, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய் தங்கம் திறந்து வைத்தார். ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் முன்னிலை

புதுச்சேரி: கலைவாணர் நகரில் புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி., அஜய் தங்கம் திறந்து வைத்தார்.

கோரிமேடு அடுத்த கலைவாணர் நகரில், பட்டானுார் கலைவாணர் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. புறக்காவல் நிலையத்தை, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய் தங்கம் திறந்து வைத்தார். ஆரோவில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், போலீசார் மேற்கொள்ளும் இரவு ரோந்து பணிகள் குறித்தும், குற்ற தடுப்பு மற்றும் புலனாய்வில் கண்காணிப்பு கேமராக்களின் முக்கியத்துவம் குறித்தும் போலீஸ் அதிகாரிகள் விளக்கி கூறினர்.

கலைவாணர் நகரில் முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.கலைவாணர் நகரில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பான குடியிருப்போர் நலச் சங்கத்தின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.விழாவில் நலச் சங்க நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X