கோல்கட்டா: மேற்கு வங்க மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சுவேந்து அதிகாரி, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர், பா.ஜ., வில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இங்கு, ஆட்சியை கைப்பற்றிவிடவேண்டும் என, மாநிலத்தில் வலுவான சக்தியாக உருவாகி வரும், பா.ஜ., தீவிரம் காட்டி வருகிறது.
![]()
|
இந்நிலையில், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் மூத்த தலைவருமான சுவேந்து அதிகாரி, நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.
அவர், தன் ராஜினாமா கடிதத்தை, கவர்னர் ஜக்தீப் தன்கருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அனுப்பிவைத்தார்.
சுவேந்துவின் திடீர் ராஜினாமா குறித்து, மாநில பா.ஜ., தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது:
அமைச்சரின் ராஜினாமா, திரிணமுல் காங்., கட்சியின் முடிவை காட்டுகிறது. சுவேந்துவைப் போல், பல தலைவர்கள், திரிணமுல் காங்.,கில் இருந்து வெளியேறுவர். அனைவருக்காகவும், கதவுகளை நாங்கள் திறந்து வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, சுவேந்து, இன்று பா.ஜ., வில் இணையவுள்ளதாக, டில்லி அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. திரிணமுல் காங்கிரஸ், எம்.எல்.ஏ.,வான, மிஹிர் கோஸ்வாமியும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட, அனைத்து பதவிகளையும், நேற்று ராஜினாமா செய்தார். பா.ஜ., - எம்.பி., ஒருவருடன் டில்லி சென்றுள்ள அவர், அந்த கட்சியில் இணைய முடிவு செய்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE