பாகூர் : தாய் மற்றும் மகனை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பாகூர் அடுத்த அரங்கனுார் இந்திரா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்,28; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அரங்கனுார் பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நிர்ணயப்பட்டு கிராமத்தை சேர்ந்த கவுதம்,28; தினேஷ்,24; பிரகாஷ்,25; பழனி,46; ஆகியோர், மணிகண்டனை இங்கு ஏன் நிற்கிறீர்கள் என கேட்டு, ஆபாசமாக திட்டி தாக்கினர். தடுக்க முயன்ற மணிகண்டனின் தாயையும் தாக்கினர்.இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் ௪ பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE