சென்னை:உடல் உறுப்பு தானத்தில், தொடர்ந்து ஆறாவது முறையாக, தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கான விருதை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், அமைச்சர்விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.
இந்திய உடல் உறுப்புக்கான, 11வது ஆண்டு தினம், நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதில், உடல் உறுப்பு தானத்தில், சிறப்பாக பங்காற்றி வரும் தமிழகம்,ஆறாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.அதேபோல, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் மூன்று தனியார் மருத்துவமனைகள், சிறந்த மருத்துவமனைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கான விருதுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், காணொலி காட்சி வாயிலாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் வழங்கினார்.
விருதுகளை, புதுக்கோட்டையில் இருந்து அமைச்சர் பெற்றுக்கொண்டார்.சென்னை, டி.எஸ்.எஸ்., வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
உடலுறுப்பு தானத்தில், தொடர்ந்து ஆறாவது முறையாக, தமிழகம் முதலாவது இடத்திற்கான விருதை பெற்றுள்ளது. இதுவரை, 1,392 பேரிடமிருந்து, 8,845 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன.கொரோனா காலத்தில்மட்டும், 97 உறுப்புகள் தானம் பெறப்பட்டன. அதில், 27 பேர் பயனடைந்துள்ளனர். முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 405 பேர் பயனடைந்துள்ளனர்.
மருத்துவ மேற்படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு, இந்தாண்டு அனுமதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, சட்ட வல்லுனர் குழுவுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.கொரோனா மட்டுமல்லாது, டெங்கு, மலேரியா போன்ற கொரோனா அல்லாத நோய்களையும்தடுக்க, முதல்வர் தலைமையில், கலெக்டர்களுடன் வரும் நாட்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. நிச்சயமாக, கொசு ஒழிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
பழனிசாமி பெருமிதம்
முதல்வர் பழனிசாமியின், 'டுவிட்டர்' பதிவு: உடல் உறுப்பு தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில், ஆறாவது முறையாக, தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற்று, மத்திய அரசின் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த சரித்திர சாதனைக்கு உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறைக்கும் என் பாராட்டுகள். ஒட்டுமொத்த துறைகளில், சிறந்து விளங்ககூடிய மாநிலங்களுக்கான பட்டியலில், தமிழகத்தை முதலிடமாக தேர்ந்தெடுத்து, 'இந்தியா டுடே' கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு, தமிழகஅரசு சார்பில், என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE