"கொரோனா தடுப்பூசி போடமாட்டேன்": பிரேசில் அதிபர் அடுத்த சர்ச்சை

Updated : நவ 27, 2020 | Added : நவ 27, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
பிரேசிலியா:கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று பிரேசில் அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூகவலைதளம் வாயிலாக நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போல்சோனாரோ, 'நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை. அது என் உரிமை' என கூறினார்.உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் நாடு 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 62

பிரேசிலியா:கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் என்று பிரேசில் அதிபர் போல்சோனாரோ தெரிவித்துள்ளார்.latest tamil newsஇது குறித்து சமூகவலைதளம் வாயிலாக நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போல்சோனாரோ, 'நான் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளப்போவதில்லை. அது என் உரிமை' என கூறினார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் நாடு 3-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் 62 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் என எதுவும் தேவையில்லை என கூறி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். தொடர்ந்து அவர், முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போல்சோனாரோவுக்கு கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


latest tamil news
தொடர்ந்து ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட 4-வது கொரோனா பரிசோதனையில் போல்சொனாரோவுக்கு கொரோனா நெகட்டிவ் என முடிவுவந்ததையடுத்து, வைரஸ் பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்தார்.தடுப்பூசி முழுமையாக கண்டுபிடிக்கப்பட்ட உடன் அதை உலகம் முழுவதிலும் உள்ள மக்களுக்கு செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் அந்த தடுப்பூசியை தான் போட்டுக்கொள்ளப்போவதில்லை என கூறி அதிபர் போல்சோனாரோ மீண்டும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-நவ-202012:56:03 IST Report Abuse
ஆரூர் ரங் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா வருகிறது. இதில் ஹெர்ட் இம்மியூனிடி சாத்தியமில்லை. தடுப்பூசி மட்டுமே நீண்டகாலத் தீர்வு. சில (கை)நாட்டு மருத்துவர்களும் சுய விளம்பர ஹீலர்களும் மட்டுமே எதிர்ப்பர்.
Rate this:
Cancel
Ela_ CBE -  ( Posted via: Dinamalar Android App )
28-நவ-202011:33:37 IST Report Abuse
Ela_ CBE Theres no clear evidence saying that natural immunity last for few months. If so, then Vaccine induced immunity will be much less! Agree?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-நவ-202011:15:37 IST Report Abuse
S.Baliah Seer இந்த கொரோனா தடுப்பூசி ஒரு ஏமாற்று என்று தெரிந்ததால்தான் பிரேசில் அதிபர் அதைப் போட்டுக்கொள்ள மறுக்கிறார்.
Rate this:
28-நவ-202012:58:54 IST Report Abuse
ஆரூர் ரங்பைபிளிலேயே இல்லாத கணினி செல்போன் கூட உங்களுக்கு வேண்டாமே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X