பரமக்குடி: பரமக்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் சிந்தாமணி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆணையாளர்கள் செந்தாமரைச் செல்வி, சந்திரமோகன் கலந்துகொண்டனர்.ஒன்றியத்திற்கு உட்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து துணைத் தலைவர் ராஜேந்திரன் பேசியபோது,பரமக்குடி யூனியனுக்கு திட்டப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வரை நிதி ஒதுக்கப்படும் நிலையில், தற்போது மாதம் வெறும் 9 லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இந்த நிதி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவே சரியாகி விடுகிறது. இதனால் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடிவதில்லை. இந்நிலையில் எங்களுக்கு வாக்களித்த கிராம மக்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.மேலும் கலெக்டர் மூலம் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சாலைகளை தார் சாலைகளாக புதுப்பிக்க 2019 - 20 ஆம் ஆண்டு மாநில நிதிக்குழு விலிருந்து, ரூ. 1.50 லட்சம் மாவட்ட ஊராட்சி முகமைக்கு அனுப்ப வேண்டும் என்கின்றனர். யூனியன் நிதியை இவ்வாறு கொடுத்துவிட்டால் இங்கு எந்த பணியும் மேற்கொள்ள முடிவதில்லை. மேலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகளுக்கு 10சதவீதம் ஒன்றிய பொது நிதியிலிருந்து பங்களிப்பு செய்ய வேண்டும் என்கின்றனர். இதனால் ஒன்றியக் கவுன்சிலர்களுக்கு எந்த பயனும் இல்லை. மேலும் நாங்கள் வைக்கும் திட்ட பணிகள் எதுவும் நடப்பதில்லை, என்றார்.ஒன்றிய கவுன்சிலர்கள் மங்களேஸ்வரி, கலைச்செல்வி, சங்கு முத்து, சிவகுமார், சேதுராமன் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE