பரமக்குடி: பரமக்குடியில் 70 ஆண்டுக்கு முன் மகப்பேறு மருத்துவமனைக்காகநடிகை சிவபாக்கியம் கொடுத்த வீடுபாழடைந்துள்ளது. பரமக்குடி ஐந்து முனை ரோடு அருகில் பழம்பெரும் சினிமா நடிகை சிவபாக்கியம் வீடு இருந்தது. இதனை கடந்த70 ஆண்டுக்கு முன் அவர் மகப்பேறு மருத்துவமனைக்காக இலவசமாகவழங்கினார். அன்று தொடங்கி 15 வருடத்திற்கு முன்பு வரைஇங்கு மருத்துவமனை இயங்கியது.தொடர்ந்து கட்டடம் எந்த பராமரிப்பும் செய்யப்படாமல் சேதமடைந்தநிலையில் உள்ளது. மகப்பேறு மருத்துவமனைகாட்டுப்பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.அன்று தொடங்கி, நடிகை கொடுத்த வீடு கவனிப்பாரின்றிசெடி, மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது.பாழடைந்து வீணாகி வரும் இடத்தை சீரமைத்துமுன்பு போல் மருத்துவமனை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE