ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி வழங்கிட டிச.,4 முதல்17 வரை பயனாளிகள் தேர்வு சிறப்புமுகாம் அந்தந்தபகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெற உள்ளது. டிச.,4 ல் ராமநாதபுரம், டிச.,5 ல் மண்டபம், டிச.,7ல் திருப்புல்லாணி, டிச., 8ல் ஆர்.எஸ். மங்கலம், டிச., 9ல் திருவாடானை, டிச.,10ல் போகலுார், டிச., 11 ல்நயினார்கோவில், டிச., 14 ல் பரமக்குடி, டிச.,15 ல் கமுதி, டிச., 16ல் கடலாடி, டிச.,17 ல்முதுகுளத்துாரில் நடைபெற உள்ளது. தேசிய அடையாள அட்டை, ரேஷன்கார்டுநகல், ஆதார் அட்டை, புகைப்படம் 2 ஆகிய ஆவணங்களை கொண்டுவர வேண்டும். விபரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04567 - 231410 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.----
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE