மும்பை தாக்குதலில் உயிரிழந்த யூதர்கள் நினைவு கல்வெட்டு

Added : நவ 27, 2020
Share
Advertisement
எய்லாத்:மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த யூதர்களின் நினைவாக, இஸ்ரேலில், நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிர தலைநகர் மும்பையின் சில பகுதிகளில், 2008 நவம்பர், 26ல், பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. அதில், 28 வெளிநாட்டினர் உட்பட, 166 பேர் உயிரிழந்தனர். அப்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால்

எய்லாத்:மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த யூதர்களின் நினைவாக, இஸ்ரேலில், நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டு உள்ளது.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையின் சில பகுதிகளில், 2008 நவம்பர், 26ல், பயங்கரவாத தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. அதில், 28 வெளிநாட்டினர் உட்பட, 166 பேர் உயிரிழந்தனர். அப்போது, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் ஒன்பது பேர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்கு, இந்தியாவில் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அந்த தாக்குதல் நடந்து, நேற்று முன்தினத்துடன், 12 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதை முன்னிட்டு, இந்தியா மட்டுமின்றி, மேற்காசிய நாடான இஸ்ரேலிலும், 12ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மும்பை தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த ஆறு யூதர்கள் உயிரிழந்தனர். அவர்களை நினைவுபடுத்தும் வகையில், எய்லாத் பகுதியில் உள்ள யூதர்கள் கோவிலில், நினைவு கல்வெட்டு திறந்துவைக்கப்பட்டது.

அந்த கல்வெட்டை, அந்த கோவில் தலைவர் ரேவ் ஹெச் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய துாதரகத்தின் முதன்மை செயலர் ரோஹித் மிஷ்ராவும் இணைந்து, திறந்து வைத்தனர்.அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:இந்தியாவின் மும்பையில் உள்ள சாபாத் இல்லத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், உயிர் தியாகம் செய்த ராபி காவ்ரியல் நோவா, நிவ்கா ஹோல்ஸ்பர்க், ராபி காவ்ரியல் டெய்டெல்பாம், நோர்மா ராபினோவிச், ராபி பென் சியோன் கர்மேன், யோசேவேத் ஆர்பாஸ் ஆகியோரின் நினைவாக, இந்த கல்வெட்டு அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X