புதுடில்லி:பீஹார் ராஜ்யசபா இடைத்தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில், முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், கடந்த அக்டோபர், 8ல், உடல்நலக் குறைவால் காலமானார். பீஹார்தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்து வந்த இவர், பீஹாரில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,யாக, 2019ல் தேர்வானார். அறிவிப்புஇவரது பதவி காலம், 2024, ஏப்ரலில் முடிவு அடைகிறது.
இந்நிலையில், பஸ்வானின் மறைவை தொடர்ந்து காலியாகி உள்ள ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு, அடுத்த மாதம், 14ல் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதில், தே.ஜ., கூட்டணி சார்பில், பீஹார் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷில்குமார் மோடி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுஉள்ளது.இந்த தேர்தலில் வெற்றி பெற்றபின், சுஷில்குமார், மத்திய அமைச்சராக்கப்படலாம் என, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE