பொது செய்தி

தமிழ்நாடு

முத்தண்ணன் குளக்கரையில்  கட்சி கட்டடங்கள் ' துாள் துாள்!'

Added : நவ 27, 2020
Share
Advertisement
கோவை:முத்தண்ணன் குளக்கரையில் அரசியல் கட்சி அலுவலகங்கள், மன்றம் என ஆறு கட்டடங்கள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 2,300 குடியிருப்புகள் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டன. அ.தி.மு.க., -கம்யூ., -தி.மு.க., அலுவலகங்கள்,கோவில்கள் இடிக்க வேண்டியிருந்தது.இந்நிலையில், அ.தி.மு.க., கட்சி அலுவலகம் இரண்டு, தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சி

கோவை:முத்தண்ணன் குளக்கரையில் அரசியல் கட்சி அலுவலகங்கள், மன்றம் என ஆறு கட்டடங்கள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 2,300 குடியிருப்புகள் சமீபத்தில் இடித்து அகற்றப்பட்டன. அ.தி.மு.க., -கம்யூ., -தி.மு.க., அலுவலகங்கள்,கோவில்கள் இடிக்க வேண்டியிருந்தது.இந்நிலையில், அ.தி.மு.க., கட்சி அலுவலகம் இரண்டு, தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சி அலுவலகம் தலா ஒன்று, வள்ளுவர் மகாஜன மன்றம் இரண்டு என ஆறு கட்டடங்கள், நேற்று இடித்து அகற்றப்பட்டன.அ.தி.மு.க., அலுவலகத்தை இடித்தபோது, கட்சியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து கட்சி அலுவலகங்களும், மன்றங்களும் இடிக்கப்படுவதாக தெரிவித்ததை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'குளக்கரையில் இருக்கும் கோவில்களையும் இடிக்க, முறையாக ஆலோசனை செய்து, விரைவில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X