பொது செய்தி

தமிழ்நாடு

வெளியே வந்துறாதீங்க :கமிஷனர் அறிவுறுத்தல்

Added : நவ 27, 2020
Share
Advertisement
கோவை;சரவணம்பட்டியில் நடக்கும் துாய்மைப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்ததுடன், நோய் தடுப்பு அம்சங்களை கடைபிடிக்க, மக்களுக்கு அறிவுறுத்தினார்.சரவணம்பட்டி, சிவானந்தபுரம் மடாலயம் ரோடு, ஜனதா நகரில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட துாய்மைப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.அப்பகுதியில்

கோவை;சரவணம்பட்டியில் நடக்கும் துாய்மைப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்ததுடன், நோய் தடுப்பு அம்சங்களை கடைபிடிக்க, மக்களுக்கு அறிவுறுத்தினார்.சரவணம்பட்டி, சிவானந்தபுரம் மடாலயம் ரோடு, ஜனதா நகரில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட துாய்மைப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.அப்பகுதியில் உள்ள மளிகை, பூக்கடைக்காரர்களிடம் சாலையோரம், கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டக்கூடாது, சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும், குப்பையை முறையாக சேகரித்து துாய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.கணபதியில் செயல்பட்டு வரும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், குப்பையை ரோட்டோரம் கொட்டியதற்காக அபராதம் விதத்தார்.போலீஸ் காலனியில் களப்பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று வெப்பமானி மூலம் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்வதையும் பார்வையிட்டார்.தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வெளியே வரக்கூடாது, சமூக இடைவெளி, மாஸ்க் உள்ளிட்ட வழிகாட்டு அம்சங்களை பின்பற்ற வேண்டுமென, அறிவுரைகள் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X