கோவை;சரவணம்பட்டியில் நடக்கும் துாய்மைப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் நேற்று ஆய்வு செய்ததுடன், நோய் தடுப்பு அம்சங்களை கடைபிடிக்க, மக்களுக்கு அறிவுறுத்தினார்.சரவணம்பட்டி, சிவானந்தபுரம் மடாலயம் ரோடு, ஜனதா நகரில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட துாய்மைப்பணிகளை, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார்.அப்பகுதியில் உள்ள மளிகை, பூக்கடைக்காரர்களிடம் சாலையோரம், கழிவுநீர் கால்வாயில் குப்பை கொட்டக்கூடாது, சுற்றுப்புறத்தை துாய்மையாக வைக்க வேண்டும், குப்பையை முறையாக சேகரித்து துாய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.கணபதியில் செயல்பட்டு வரும் டிபார்ட்மென்ட் ஸ்டோர், குப்பையை ரோட்டோரம் கொட்டியதற்காக அபராதம் விதத்தார்.போலீஸ் காலனியில் களப்பணியாளர்கள் வீடுகளுக்கு சென்று வெப்பமானி மூலம் காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்வதையும் பார்வையிட்டார்.தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடியும் வரை வெளியே வரக்கூடாது, சமூக இடைவெளி, மாஸ்க் உள்ளிட்ட வழிகாட்டு அம்சங்களை பின்பற்ற வேண்டுமென, அறிவுரைகள் வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE