செஞ்சேரி அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சேரி அரசு பள்ளிக்கு காமராஜர் விருது வழங்கல்

Added : நவ 27, 2020
Share
பல்லடம்:சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதுக்கு, செஞ்சேரி அரசு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மரகதம் கூறியதாவது:கணினி வகுப்பு, அனைத்து வகுப்பறையிலும், 'ஸ்மார்ட் டிவி', தொடு திரையுடன் கூடிய 'ஸ்மார்ட்' வகுப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வகம், நுாலகம் உட்பட அனைத்து வசதிகளும் பி.டி.ஏ., மூலம்

பல்லடம்:சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதுக்கு, செஞ்சேரி அரசு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மரகதம் கூறியதாவது:கணினி வகுப்பு, அனைத்து வகுப்பறையிலும், 'ஸ்மார்ட் டிவி', தொடு திரையுடன் கூடிய 'ஸ்மார்ட்' வகுப்பறை, குடிநீர் வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வகம், நுாலகம் உட்பட அனைத்து வசதிகளும் பி.டி.ஏ., மூலம் செய்யப்பட்டுள்ளன.கல்வி திறன், விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்பு என, மாணவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். பள்ளியின் கட்டமைப்பு, மற்றும் கல்வித்தரம் உள்ளிட்டவற்றால் ஈர்க்கப்பட்டு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். மெய்நிகர் வகுப்பறை அமைக்க பள்ளி தேர்வாகியுள்ளது. நடப்பு ஆண்டு காமராஜர் விருதுக்கு பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தலைமை ஆசிரியரிடம், காமராஜர் விருது மற்றும் 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X