பொது செய்தி

தமிழ்நாடு

எங்களை பிழைக்க விடுங்க :கமிஷனரிடம் மீனவர்கள் மனு

Added : நவ 27, 2020
Share
Advertisement
கோவை:மீன் பிடிக்க அனுமதி தொடர்பான அறிவிப்பு பலகையை அகற்றி, வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்(கே.1629) தலைவர் பாலமுருகன் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:மாவட்ட கலெக்டர் எங்களுக்கு, 2019 முதல், 2023ம் ஆண்டு வரை குளங்களை ஒதுக்கி தந்துள்ளார். இதில் நான்கு குழுக்களாக

கோவை:மீன் பிடிக்க அனுமதி தொடர்பான அறிவிப்பு பலகையை அகற்றி, வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய, மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை வட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்(கே.1629) தலைவர் பாலமுருகன் மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:மாவட்ட கலெக்டர் எங்களுக்கு, 2019 முதல், 2023ம் ஆண்டு வரை குளங்களை ஒதுக்கி தந்துள்ளார். இதில் நான்கு குழுக்களாக பிரித்து, மீன் குஞ்சு இருப்பு செய்து, மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். தற்போது, நடந்து வரும் 'ஸ்மார்ட் சிட்டி' பணிகளுக்கு, எங்களால் எந்தவொரு இடையூறும் இல்லை.'மீன் பிடிக்க அனுமதி இல்லை; மீறி மீன் பிடிப்பவர்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவர்' என்ற குமாரசாமி குளத்தின் அருகே வைக்கப்பட்டுள்ள, மாநகராட்சி அறிவிப்பு பலகை, அதிர்ச்சியடையச்செய்துள்ளது.நாங்கள், 2020ம் ஆண்டுக்கான மீன் பாசி குத்தகை தொகை செலுத்தி, மீன் பிடித்து வருகிறோம். எனவே, இந்த அறிவிப்பு பலகையை அகற்றி, 719 மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X