திருப்பூர்:மேட்டுப்பாளையம் மற்றும் கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் நீலகிரி, சேரன் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி இரவு, 9:20க்கு பதில், 9:05க்கு சென்னையில் நீலகிரி எக்ஸ்பிரஸ் புறப்படும்; 6:15க்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். மறுமார்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு, 7:45க்கு பதில், 9:20 மணிக்கு ரயில் புறப்படும். அதிகாலை, 4:50க்கு சென்று சேர வேண்டியது, காலை, 6:20க்கு சென்னை சென்று சேரும்.கோவையில் இருந்து இரவு, 10:40 க்கு புறப்பட வேண்டிய சேரன் எக்ஸ்பிரஸ், பத்து நிமிடம் தாமதமாக, 10:50 மணிக்கு புறப்படும். காலை, 6:35 க்கு பதில், 7:00 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுமார்க்கமாக இரவு, 10:00 மணிக்கு சென்னையில் புறப்படும் ரயில், மறுநாள் காலை கோவைக்கு, 6:00 மணிக்கு வந்து சேரும்.ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,'வரும், 30ம் தேதி முதல் புதிய நேரப்படி சேரன், நீலகிரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும். புறப்படும், சென்று சேரும் நேரத்துக்கு ஏற்ப, திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி உள்ளிட்ட அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு ரயில் வந்து செல்லும் நேரமும் மாறுபடும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE